சமீபமாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரவலாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது மைதானத்தில் திரண்ட பார்வையாளர்கள் மைதானத்தின் உள் இந்திய தேசிய கொடியோடும் அடையாளங்களோடும் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய அடையாளத்தோடு போன பார்வையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களிடம் இருந்து தேசிய அடையாளங்கள் பறிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவரின் எச்சரிக்கைக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் தேசிய கொடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் தேசிய அடையாளங்கள் மறுக்கப்பட்டதும் தேசிய கொடியை தமிழக காவல்துறை அவமதித்ததும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக விளையாட்டுப் போட்டிகளை பொருத்தவரையில் எந்த நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் அந்த நாட்டவர்களும் போட்டியில் பங்கு பெறும் நாட்டவர்களும் அவரவருடைய விருப்ப அணியின் வெற்றிக்கு கோஷமிட்டு உற்சாகப்படுத்துவதும் வெற்றி பெற்ற அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதும் மரபு . இதில் போட்டி நடைபெறும் நாடுகளில் இருப்பவர்களும் வெளிநாட்டவர்களும் கூட அவரவர் விருப்பப்பட்ட நாடுகளின் வெற்றிக்காக வீரர்களை உற்சாகப்படுத்துவதும் அதற்காக தான் விரும்பும் நாட்டின் அடையாளத்தோடும் தேசிய கொடியோடும் போய் பங்கேற்பதும் உலக அளவில் பின்பற்றப்படும் விளையாட்டு மரபு தான். இது போன்ற விஷயங்களில் தான் ஒவ்வொரு நாடும் அதன் விளையாட்டு வீரர்களும் தனது நட்பு நாடுகள் யார் ? நலன் விரும்பும் நாட்டு மக்கள் யார் ? தங்களின் வெற்றியை விரும்பிக் கொண்டாடுபவர்கள் யார் ? தங்களின் தோல்வியை விரும்புபவர்கள் யார்? தங்களின் தோல்வியின் போது உடனிருந்து ஆறுதல் சொல்பவர்கள் யார் ? தங்களது தோல்வியை வெற்றி கொண்டாட்டம் போல கொண்டாடி மகிழும் துரோகிகள் யார்? என்பதை எல்லாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும் .
விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு என்பதை கடந்து வீர விளையாட்டுகளாகவும் உலக அளவில் நாடும் மக்களும் தங்களின் நலன் நாடும் நண்பர்களை நலன் விரும்பிகளை அடையாளம் காண்பதற்கும் உதவியாக இருக்கும். இந்த அடிப்படையில் தான் இந்திய பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் நேரிடையான பலப் பரிட்சையாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியின் போது இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து இந்த நாட்டின் குடியுரிமையோடும் சகல உரிமைகளோடும் வாழ்ந்து கொண்டு பாகிஸ்தானின் வெற்றிக்காக பாரதத்தின் தோல்விக்காக பிரயத்தனம் செய்யும் உள்நாட்டு துரோகிகளை அடையாளம் காண முடிகிறது. மேலும் சொந்த நாட்டின் தோல்வியை பகைநாட்டின் வெற்றியை தங்களது சொந்த வெற்றியைப் போல கொண்டாடி மகிழும் அவர்களின் குரூர எண்ணமும் இந்த தேசத்தின் மீதும் தேசிய இறையாண்மை மீதும் அவர்களுக்கு இருக்கும் வன்மத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதை கடந்த வாரம் நடந்த இந்திய பாகிஸ்தான் இடையே நடந்த விளையாட்டுப் போட்டிகள் அதை ஒட்டி நடந்த விமர்சனங்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு எழுப்பப்பட்ட கேள்விகளை சீர்தூக்கிப் பார்க்கும்போது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இதில் போட்டி நடைபெறும் இடத்தில் சொந்த நாட்டு அணி பங்கேற்கும் பட்சத்தில் அது ஒரு விளையாட்டு என்பதை கடந்து தன்மானத்தின் போட்டியாகவே பார்க்கப்படும். எதிரில் இருக்கும் அணி பகை நாடாக இருக்கும் பட்சத்தில் அந்த போட்டியின் விளையாட்டு ஆடுகளமும் போர்க்களமாகவே பார்க்கப்படும். என் நிலையிலும் தன் தேசம் தோற்க கூடாது. எப்பாடுபட்டேனும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகமே அங்கு விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கும் மைதானத்தில் திரண்டு இருக்கும் சொந்த நாட்டு மக்களுக்கும் ஒரே இலக்காக இருக்கும். அதனால் தான் இந்தியா பாகிஸ்தான் இடையேயான விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு என்பதை கடந்து இரு நாட்டிற்கும் இடையான பல பரிட்சையாகவே இருந்து வருகிறது. அதனால் தான் இரு நாட்டு வீரர்களும் மக்களும் இந்த போட்டிகளுக்கு அதிக ஆர்வமும் பிரயத்தனமும் செய்கிறார்கள். இது விளையாட்டில் இருக்கும் வழக்கமான நிகழ்வுகள் தான். ஆனால் இந்த வழக்கமான நிகழ்வுகளை கூட மலிவான வாக்கு வாங்கி அரசியலுக்காக பயன்படுத்தப்படும் திராவிட அரசியலால் தமிழக மக்களும் காவல்துறையும் பெரும் தலைகுனிவை எதிர்நோக்கி வருகிறது.
பாரதத்தின் அறிவிக்கப்பட்ட பகை நாடாக இருப்பது பாகிஸ்தான். அறிவிக்கப்படாத பகை நாடாக இருந்து வந்தது ஆப்கானிஸ்தான். ஆனால் இந்த இரண்டு நாடுகளின் அடையாளங்களோடும் தேசிய கொடியை ஏந்தி அந்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கு இந்த நாட்டில் குடிமக்களுக்கு முழு அனுமதியும் சுதந்திரமும் இருக்கிறது. அதை தமிழக கிரிக்கெட் வாரியமும் காவல்துறையையும் அனுமதித்திருக்கிறது. ஆனால் இந்திய திருநாட்டில் இந்திய தமிழகத்தில் பாரதியர்கள் தங்களின் தேசிய அடையாளத்தோடும் தேசிய கொடியோடும் மைதானத்தில் போய் விளையாட்டை கண்டு களிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
தங்களைப் போலவே பாகிஸ்தானின் மத பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு பாரதத்தின் உதவியால் மீண்டு எழுந்து வரும் ஆப்கானிஸ்தான் சகோதரர்களை உற்சாகப்படுத்தும் பாரதீயர்களின் நல்லெண்ணம் தடுக்கப்பட்டிருக்கிறது. பாரதம் போலவே பயங்கரவாதத்தின் கோரத்தாண்டவத்தை அனுபவித்து அதன் காரணமாக அதிலிருந்து விடுபட வேண்டும் .தங்களை இந்த மத பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து பாதுகாக்க பாரதத்தாலும் அதன் தலைமை ஆளுமை மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையோடு பாரதத்தோடு நெருங்கிய நல்லெண்ணமும் நட்புறவும் வேண்டி நிற்கும் ஆப்கானிஸ்தானின் மக்களுக்கும் அதன் விளையாட்டு வீரர்களுக்கும் நல்லெண்ண அடிப்படையில் பாரதியார்கள் வெளிப்படுத்த வேண்டிய நியாயமான ஆதரவும் உற்சாகமும் தமிழக காவல்துறையால் தடுக்கப்பட்டது . இது தமிழக காவல்துறையை பின்னிருந்து. இயக்கும் மாநில அரசின் தேச விரோத போக்கையும் பகை நாட்டு ஆதரவையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து இங்கு சுகபோகமாக வாழ்ந்து கொண்டே இந்த தேசத்தின் பகை நாடான பாகிஸ்தான் வெற்றி பெறவும் அவர்களின் வெற்றியை கொண்டாடவும் முழு சுதந்திரம் இருக்கிறது. இதை தமிழகத்தின் ஆளும் அரசும் அவர்களின் கட்சியும் வெளிப்படையாக ஆதரிக்கிறது. இந்த நாட்டின் வெற்றியை ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமிட்டு வரவேற்றது பாகிஸ்தான் அணியும் வீரர்களையும் அவமதிக்கிறது என்று சொல்லி அதற்காக அந்த நாட்டிடம் மன்னிப்பு கேட்பதற்கு கூட இங்கு உள்ளவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் தங்களுக்கு விருப்பமான ஆப்கானிஸ்தான் நாட்டின் வெற்றிக்கு உற்சாகமாக ஆரவாரம் செய்வதற்கு தங்களின் தேசியக்கொடி ஏந்தி மைதானத்தில் போவதற்கு இங்கு உள்ள பாரதியர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனில் தமிழகம் எந்த அளவிற்கு தேச விரோதப் பிடியிலும் உள்நாட்டு துரோகத்தின் களமாகவும் மாறி வருகிறது ? என்பதை நம்மால் யூகிக்க முடியும்.
பாரதத்தின் பகை நாடான பாகிஸ்தானில் கூட பயங்கரவாதிகளை பார்க்க முடியும். ஆனால் துரோகிகளை பார்ப்பது அபூர்வம் .தேசியமும் தெய்வீகமும் ஆழ்ந்து ஊடுருவி இருக்கும் தமிழகத்தில் இன்று திரும்பிய பக்கமெல்லாம் மொழி இனவாதமும் பிரிவினை வாதமும் பயங்கரவாதமும் பகை நாடான பாகிஸ்தானின் ஆதரவு தேச விரோத போக்கும் தலைவிரித்தாடுகிறது. அதை மாநிலத்தின் ஆளும் கட்சி வாக்கு வாங்கி அரசியலுக்காக அனுமதிப்பது சாதாரண விஷயம் இல்லை. இன்று வாக்கு வாங்கி அரசியலுக்காக பகைநாட்டை ஆதரிப்பவர்கள். சொந்த தேசத்தை தேசிய கொடியை அவமதிப்பவர்கள். நாளை அதே அரசியல் ஆதாயத்திற்காக ஆட்சி அதிகாரத்திற்காக பகை நாடுகளுக்கு ஆதரவாக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதே அவர்களின் சமகால தேச விரோத செயல்கள் சொல்லும் பாடம். இதை மாநில ஆளுநரும் மத்திய அரசும் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.