தேசமே என் தெய்வம்: மத்திய அரசு திட்டத்திற்கு பிரபல நடிகர் ஆதரவு!

தேசமே என் தெய்வம்: மத்திய அரசு திட்டத்திற்கு பிரபல நடிகர் ஆதரவு!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு பிரபல நடிகர் நடராஜன் ஆதரவு வழங்கி இருப்பதற்கு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இன்று வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாதிகளின் சதி இருக்கின்றன என்பது பல சமூக ஆர்வலர்களின் ஒருமித்த குற்றச்சாட்டக இருந்து வருகிறது.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் அக்னிபாத். இத்திட்டத்திற்கு, வழக்கம்போல காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. இதன் மூலம், எதிர்க்கட்சிகளின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்திய ராணுவத்தின் பலம் மற்றும் அதிக அளவிலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தரும் திட்டம் தான் அக்னிபாத். இதுதவிர, அக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவலை பரப்பிய 35 வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தடை விதித்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல நடிகரும் இயக்குனருமான நடராஜன் அக்னிபாத் திட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்.. தேசமே தெய்வம் என்று தனது உணர்வினை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகரின் இக்கருத்தினை நெட்டிசன்கள் வரவேற்று இருக்கின்றனர்.


Share it if you like it