தவறான செய்தி: அசிங்கப்பட்ட ’முத்துபாண்டி’!

தவறான செய்தி: அசிங்கப்பட்ட ’முத்துபாண்டி’!

Share it if you like it

பிரதமர் குறித்து அவதூறான செய்தியை பரப்பிய நடிகர் பிரகாஷ் ராஜ் வருத்தெடுத்து வரும் நெட்டிசன்கள்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு செயலை செய்தாலும் அதுபற்றி உடனே பொய் செய்தியை பரப்பி ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இன்று வரை இருந்து வருகின்றனர். அந்தவகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரும் பிரபல நடிகருமான பிரகாஷ் ராஜ் பிரதமர் குறித்து தவறான செய்தியினை வெளியிட்டு இன்று அசிங்கப்பட்டு நிற்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதப் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு சென்று இருக்கிறார். இதனிடையே, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர் என அனைவரும் பிரதமரை வரவேற்க வேண்டி விமான நிலையத்தில் காத்து இருந்தனர். இதையடுத்து, அங்கு வந்த பிரதமர் காலில் ஒருவர் விழ முயன்று இருக்கிறார். இதற்கு, மோடி என் காலில் விழ வேண்டாம் என்பது போல தனது செய்கையின் மூலம் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையடுத்து, வரிசையில் நிற்கும் மற்ற நபர்களிடம் வணக்கம் செலுத்தி கொண்டே செல்லும் பிரதமர் காலில் ஒருவர் விழுந்துள்ளார். இதனை சற்றும் எதிர்ப்பாக்காத பிரதமர் சற்று பின்வாங்கி அவரிடம் ஏதோ பேசிய விட்டு மீண்டும் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி விட்டு ஹெலிக்காப்டரில் ஏறுவது போல இக்காணொளி அமைந்து இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமர் போட்டோ சூட் நடத்துகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பொய் செய்தியை பரப்பி இருக்கின்றனர்.

இந்த நிலையில் தான், பிரதமர் ஏன் விமான நிலையத்தில் அப்படி நடந்து கொண்டார் என்பதற்கான முழுமையான காணொளி தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அந்தவகையில், உண்மை தன்மையை முழுமையாக ஆராயாமல் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரும் பிரபல நடிகருமான பிரகாஷ் ராஜ் பிரதமர் குறித்து தவறான செய்தியினை வெளியிட்டு தற்பொழுது அசிங்கப்பட்டு இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it