பிரபல திரைப்பட நடிகர் விஜய் மீது தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருப்பது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் அதிக ரசிகர்களை கொண்டவர். மேலும், திரைத்துறையையும் தாண்டி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டர். சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தனித்து களம் கண்டது இவரின் விஜய் மக்கள் இயக்கம். நேரடியாக அரசியலுக்கு வராமல், தனது ஆதரவாளர்களை களம் இறக்கி அரசியலை ஆழம் பார்ப்பது சரியான செயல் அல்ல, என பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
மக்களின் பெரும் ஆதரவை மட்டுமில்லாமல் தொடர்ந்து, சர்ச்சைகளிலும் நடிகர் விஜய் சிக்கி வருகிறார். தனது ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரித்தொடர்பான வழக்கில், அண்மையில் அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்தொகையை, கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருந்தது. கடந்தாண்டே நிவாரண நிதியாக அரசுக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளேன். எனவே, கொரோனா நிதி வழங்க எனக்கு விருப்பமில்லை, என்று நடிகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய்யின் இந்த பொறுப்பற்ற பதில் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
அந்த வகையில், நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டு (ஏப்., 13ம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில், ஏப்., 2-ல் மாலை 6-மணிக்கு பீஸ்ட் பட டிரைலர் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து, அவர்களின் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் கட் அவுட்டிற்கு, பால் அபிஷேகம் செய்து வருகின்றனர். இதற்கு, தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமி, பால் அபிஷேகம் செய்து வரும் ரசிகர்கள் மீதும், அதனை தடுக்க தவறிய நடிகர் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/https://www.facebook.com/watch/?v=501898424768986&extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing