நடிகர் விஜய் குறித்து… பா.ஜ.க. சட்டப்பேரவை குழு தலைவர் கருத்து!

நடிகர் விஜய் குறித்து… பா.ஜ.க. சட்டப்பேரவை குழு தலைவர் கருத்து!

Share it if you like it

 “நடிகர் விஜய் உள்ளிட்ட யார் பா.ஜ.க. கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்” என்று பா.ஜ.க. சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு பேசினார் : ‘அடுத்த முதல்வர் நடிகர் விஜய்’ என அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஆசைப்படுவது தவறில்லை. விஜய் உள்ளிட்ட யார் பா.ஜ.க. கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். பா.ஜ.க. எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. பா.ஜ.க. மதவாத கட்சியும் அல்ல. ‘நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு’ என சொல்வது தவறு. அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.


Share it if you like it