ஹிந்தி படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் மிக கடுமையாக சாடி வருகின்றனர்.
ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் கொண்ட (டீ சர்ட்டை) உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளர்கள் அணிந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். தி.மு.க.வின், விஷமதனமான கருத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதரவு தரும் வகையில் தானும் அந்த டீ சர்ட்டை அணிந்து கொண்டு ஹிந்தி பேசும் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மாணிக் எனும் திரைப்படத்தை இயக்க உள்ளது. இப்படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இரண்டு நிறுவனங்களும் இணைந்து அண்மையில் வெளியிட்டன. ஹிந்தியில் வெளியான ‘ லுடோக், ‘ஐக்கா ஜாசூஸ்க் மற்றும் ‘சத்ரசல்க் ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவார்த்தி, இப்படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் தொடங்குகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 2017- ஆம் ஆண்டு டாடி என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, 5 ஆண்டுகள் கழித்து தற்போது இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க.
ஹிந்தியை அவமதிப்பு செய்த நடிகை எதற்கு அம்மொழியில் நடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.