என் செருப்பு சைஸ் 41… தைரியம் இருந்தா நேர்ல வா : உ.பி.யை பொளந்து கட்டிய குஷ்பூ!

என் செருப்பு சைஸ் 41… தைரியம் இருந்தா நேர்ல வா : உ.பி.யை பொளந்து கட்டிய குஷ்பூ!

Share it if you like it

தி.மு.க. தொண்டரின் கீழ்த்தரமான பதிவிற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின், தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் நடிகை குஷ்பு. இவரது, சகோதரர் அண்மையில் உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து, தனது அண்ணனின் நினைவாக தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார் ; வாழ்க்கை பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. எனது, சகோதரரின் பயணம் இன்றோடு முடிவடைகிறது என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு, பிரவின் சிட்டி என்ற தி.மு.க. தொண்டர், அக்காவுக்கு சின்னதம்பி நினைப்பு வந்துருச்சு’ என கிண்டலாக பதிவிட்டிருந்தார். பெரும் சோகத்தில், இருந்த நடிகை குஷ்புவிற்கு, தி.மு.க. தொண்டரின் கருத்து கடும் கோவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், கொதித்தெழுந்த நடிகை குஷ்பு, ‘என் செருப்பு சைஸ் 41. தைரியம் இருந்தா நேர்ல வா.

இதுதான் உங்க கீழ்த்தனமான புத்தி. மாறவே மாட்டீங்களா டா..? நீயெல்லாம் கருணாநிதி பாலோயர்னு சொல்லிக்க வெட்கப்படணும். திமுக.,வே இதுதான் உங்கள் கட்சிக்காரர். இதைவிட கீழ்த்தரமாக இருக்க முடியுமா?’ என கருத்து தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கழக கண்மணி தனது பதிவினை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it