370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – குடியரசு தலைவர் !

370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – குடியரசு தலைவர் !

Share it if you like it

குடியரசுத் தலைவர் மாளிகையில் ‘வதன் கோ ஜானோ’ எனப்படும் தேசத்தைத் தெரிந்து கொள்ளுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள் குழு நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தது.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

நாட்டில் நடைபெறும் கலை, கலாசாரம், நாகரிகம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ‘வதன் கோ ஜானோ’ செயல் திட்டத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார். வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு ஆடைகள், வெவ்வேறு வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும் அனைவரும் ஒன்று என்பதை அவர்கள் சுற்றுப்பயணத்தின் போது உணர்ந்திருப்பார்கள் என தெரிவித்தார். இந்த ஒற்றுமைதான் நமது உண்மையான பலம் என்றும் அதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு செயல்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்கள் இந்தியாவின் பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாறுவதன் மூலம் தங்கள் கனவுகளை அடைய விரும்புகிறார்கள் என்று கூறினார். ஆனால் இன்றளவும் சில சக்திகள் காஷ்மீர் முன்னேறுவதை விரும்பவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும், ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்துவதாக கூறினார். அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.


Share it if you like it