சமீபத்தில் திரைக்கு வந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படம், இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அடுத்ததாக வெளிவரவிருக்கும் 72 கன்னிகள் திரைபட்டம் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
சமீபத்தில் திரைக்கு வந்த படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தில் ஹிந்து பெண்கள் மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐஸ். பயங்கரவாத அமைப்புக்கு அடிமைகளாக அனுப்புவதை மையக்கருவாகக் கொண்டிருந்தது. இது இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பியது. இதனால், மேற்குவங்கத்தில் இத்திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தை சுட்டிக்காட்டி, திரையிடப்படவில்லை.
இந்த நிலையில்தான், அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் 72 கன்னிகள் என்கிற திரைப்படம் அடுத்த பரபரப்பை கிளப்பி இருக்கிறது. சஞ்சய் பூரன் சிங் சவுகான் இயக்கத்தில் ’72 ஹூரைன்’ என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படம் ஜூலை மாதம் 7-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம், இஸ்லாமியர்கள் மரணமடைந்து சொர்க்கத்திற்கு செல்லும்போது, அங்கு அவர்களுக்காக 72 கன்னிமார்களின் தயாராக காத்திருப்பார்கள் என்கிற இஸ்லாமிய பயங்கரவாதிகள் கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், இப்படம் குறித்த விவாத நிகழ்ச்சிக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண் சுபீனா கான் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக பேராசிரியர் ஷோயப் ஜமாய் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து சுபீனா கான் பேசவே, ஆத்திரமடைந்த ஷோயம், அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த சுபீனா கான், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே ஷோயப்பை தாக்கத் தொங்கிவிட்டார். இதனால், நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.