டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்களுக்கும், அதனை பாதுகாக்க முயற்சிப்பவர்களுக்கும் இடையே தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பதற்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை ரீதியில் நாம் போராட ‛ இண்டியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது. பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்கிற ராகுல் காந்தியின் கருத்து மக்களிடையே பேசுபொருளாகி உள்ளது. பிரதமர் வேட்பாளரையே இண்டியா கூட்டணியால் தேர்வு செய்ய முடியவில்லை. இவர்கள் எப்படி மக்களை ஆள போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.
பிரதமர் மோடி மேடை பேச்சுக்களில் பேசும்போது மீண்டும் நான் தான் பிரதமராக வருவேன் என்றும் மீண்டும் பிரதமரானால் என்ன திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்கிற அளவுக்கு தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடியின் பேச்சும் செயல்பாடும் உள்ளது. ஆனால் காங்கிரசில் அடுத்து என்ன திட்டம் என்கிற குழப்பத்திற்கு பதிலாக அடுத்து யார் பிரதமர் என்பதுதான் அவர்களுக்குள் குழப்பம் வரும் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.