‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவம் அடிப்படைவாதிகளின் அஜென்டாவா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர் மற்றும் சமூக ஆர்வலரும், தேசப் பற்றாளருமான ஒருவரிடம் பேசினோம். “சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. ஆகவே, ராணுவத்தில் அதிக அளவிலான இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்திலும், அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும் ‘அக்னிபாத்’ என்கிற திட்டத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இத்திட்டத்தின்படி, 17 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் ராணுவத்தில் சேர முடியும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தில் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். மாத சம்பளமாக முதல் 3 ஆண்டுகளுக்கு தலா 30,000 ரூபாயும், 4-வது ஆண்டு முதல் 40,000 ரூபாயும் வழங்கப்படும். 4 ஆண்டு பணி முடிந்து திரும்பும்போது, அவர்களது வங்கிக் கணக்கில் 11 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்படும்.
இத்திட்டத்திற்கு நாடு முழுவதுமுள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம், சில இடங்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்வீச்சு, பஸ், ரயில் எரிப்பு, பொதுசொத்துக்கள் சூறை என வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இங்குதான் நாம் ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதாவது, அரசாங்க வேலை கிடைக்காதா என்று ஏங்கும் இளைஞர்கள் மத்தியில், அரசு வேலை கிடைக்கிறது என்கிற நிலை வரும்போது, அதை யாராவது எதிர்ப்புத் தெரிவிப்பார்களா? அதுவும் ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவார்களா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆக, இந்த வன்முறைக்குப் பின்னணியில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
உதாரணமாக, வன்முறைகள் நடைபெற்ற இடங்களை அக்னிபாத் திட்டத்தோடு நாம் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது இது எந்தளவுக்கு உண்மை என்பதும் புலனாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிகம் வசிக்கும் உ.பி. மாநிலம் அலிகர், வாரணாசி, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத், பீகார் மாநிலம் பக்ஸர், சம்ஸ்திபூர், லேகிசரை, ஆரா போன்ற இடங்களில்தான் வன்முறைகள் அரங்கேறி இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், சம்பந்தமே இல்லாமல் பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடுகளையும் சூறையாடியதுதான். அக்னிபாத் திட்டத்துக்கும் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும் என்ன தொடர்பு? எதவும் இல்லை. அதேசமயம், மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் ராணுவத்தை பலப்படுத்துவதுதான் முக்கியமான நோக்கமாகும். அப்படி நமது நாட்டின் ராணுவம் பலமடைந்து விட்டால், அது யாருக்கு நஷ்டம்? எதிரி நாடுகளுக்கும், தேச விரோதிகளுக்கும்தானே? ஆகவே, நமது ராணுவத்தின் பலத்தை குறைக்க வேண்டும் என்பது நம் நாட்டில் நம்முடனேயே வசிக்கும் குறிப்பிட்ட சில தேச விரோத சக்திகளின் சதிச்செயல். எனவே, தேச விரோதிகள் இளைஞர்களை தூண்டி விட்டு வன்முறையில் ஈடுபட வைத்திருக்கிறார்கள். இதை, வன்முறையில் ஈடுபட்டவர்கள் கூறும் காரணத்தை வைத்தே நாம் தெரிந்துகொள்ள முடியும்.
அதாவது, 4 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் என்ன செய்வோம்? ஆகவே, பணி நிரந்தரம் வேண்டும். மேலும், அக்னிபாத் திட்டத்தை கைவிட்டு, நேரடியாக ராணுவத்துக்கு ஆட்களை சேர்க்க வேண்டும் என்கிறார்கள். இதுதான் போராட்டத்துக்கான உண்மை காரணமா என்றால் அதுதான் இல்லை. பொதுவாகவே, மத அடிப்படைவாதிகளின் நோக்கம் என்னவென்றால், இந்தியாவை எப்படியாவது இஸ்லாமிய நாடாக்கி விட வேண்டும் என்பதுதான். இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருக்கிறோம். சமீபத்தில்கூட, கேரளாவில் நடந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பேரணியில் கலந்துகொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கொல்வோம் என்று அறைகூவல் விடுத்தது நினைவிருக்கலாம். மேலும், அதே கேரளாவில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பு சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில், 2031-ல் கேரளா இஸ்லாமிய மாநிலமாகும், 2050-ல் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் என்று குறிப்பிட்டிருந்ததும் நினைவுகூரத்தக்கது.
ஆகவே, தங்களது திட்டத்தை நிறைவேற்ற ஒரு அஜென்ட்டாவை கையில் எடுத்திருக்கிறார்கள். அதுதான் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பது. அதாவது, அடிக்கடி போராட்டம், கலவரம், வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை நாசமாக்கி, இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படைவாதிகளின் திட்டம். இதன் காரணமாகவே, சமீப காலமாக ஹிந்து பண்டிகைகளின்போது கல்வீச்சு, கலவரம், வன்முறை போன்ற செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்தவகையில்தான், ராமநவமி விழா, ஹனுமன் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நாடுமுழுவதும் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றினார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான், அக்னிபாத் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டு, பஸ், ரயில் மற்றும் பொதுச்சொத்துக்களை சீரழித்திருக்கிறார்கள். ஆகவே, அடிப்படைவாதிகளின் இந்த அஜென்ட்டாவை மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்காவிட்டால், நாட்டில் வன்முறைகள் தவிர்க்க இயலாததாகி விடும். அதோடு, இந்திய பொருளாதாரமும் பாதிப்படையும் என்பது நிதர்சனமான உண்மை…” என்றார்.
மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், மக்கள் விழித்துக் கொள்வது நல்லது.
I am interested to agnipath