தேச துரோகிகளை அடையாளம் காட்டிய ‘அக்னிபாத்’ திட்டம்: இயக்குநர் பேரரசு பொளேர்!

தேச துரோகிகளை அடையாளம் காட்டிய ‘அக்னிபாத்’ திட்டம்: இயக்குநர் பேரரசு பொளேர்!

Share it if you like it

அக்னிபாத் திட்டம் தேச துரோகிகளை அடையாளம் காட்டி விட்டதாக தமிழ்த் திரைப்பட இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார்.

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியா என்பது பொதுவானது. இன்று ஒரு கட்சி ஆளும், நாளை மற்றொரு கட்சி ஆளும். ஆகவே, கட்சியை விமர்சனம் செய்யலாம், கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது. அக்னிபாத் திட்டம் மதம் சார்ந்த திட்டமோ அல்லது கட்சி சார்ந்த திட்டமோ கிடையாது. இது இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த திட்டம்.

இத்திட்டத்தில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்ற வேறுபாடு கிடையாது. விருப்பம் இருக்கும் இந்தியர்கள் யாராக இருந்தாலும் சேர்ந்து கொள்ளலாம் என்றுதான் மத்திய அரசு கூறிவருகிறது. அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி கொடுத்து அவர்களுக்கு தேவையானவற்றை மத்திய அரசு செய்துகொடுக்கிறது. இளைஞர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. இதற்கு மேல் வேறு என்ன செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் இந்தியாவை நாசமாக்கும் திட்டங்கள் என்று கூறுகிறார்கள். எந்த திட்டம் வந்தாலும் அதை எதிர்க்கும் தீயசக்தி கும்பல் ஒன்று இருக்கிறது. இதுபோன்ற கும்பலை பிரதமர் மோடி களையெடுக்க வேண்டும்.

இளைஞர்கள் ரயிலை கொளுத்தும் அளவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. இதுபோன்ற இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள். என்னை பொறுத்தவரை பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தேசத் துரோகிகள்தான். அந்த வகையில், அக்னிபாத் திட்டம் தேச துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டது. வன்முறையை தூண்டி விட்டு ஹிந்துத்துவாவை வளர்க்கிறார்கள் என்ற அயோக்கிய தனமான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். அதேபோல், ஹிந்தி படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம் என்றுதான் மத்திய அரசு கூறுகிறது. ஆனால், ஹிந்தியை திணிப்பதாகக் கூறி மொழியை வைத்து மத்திய அரசை விமர்சிக்கின்றனர். இங்குள்ள டாஸ்மாக் கடையால்தான் இளைஞர்கள் நாசமாய் போய் கொண்டிருக்கிறார்கள். இதை முதலில் இழுத்து மூடுங்கள். இந்தியாவுக்கு நல்லது நடந்து விடக்கூடாது என்று ஒரு கும்பல் இதுபோன்ற வேலைகளை செய்து வருகிறது” என்றார்.


Share it if you like it