விவசாயிகளின் நண்பன் மோடி!

விவசாயிகளின் நண்பன் மோடி!

Share it if you like it

மத்திய பா.ஜ.க. அரசை விவசாயிகளின் எதிரியைப்போல சித்தரித்து வருகின்றன எதிர்க்கட்சிகள். ஆனால், உண்மையில் பா.ஜ.க. விவசாயிகளின் நண்பன் என்பது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. இதன் பிறகு, சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் அரசு செய்த குளறுபடிகளை எல்லாம் பா.ஜ.க. அரசு சரி செய்து வருகிறது. குறிப்பாக, கள்ள நோட்டு புழக்கத்தால் சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தை, சரி செய்யும் விதமாக 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார் பிரதமர் மோடி. இதன் பிறகு, நமது பொருளாதாரமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. தவிர, நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்த பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடி கவனம் செலுத்தி சில அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்தார்.

அதேபோல, விவசாய நாடான இந்தியாவில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தினார். குறிப்பாக, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் நஷ்டமடைந்து பரிதவிக்கும் விவசாயிகளை காப்பாற்றும் விதமாக, 2019-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இது தவிர, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

குறிப்பாக, விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக புதிதாக 3 வேளாண் சட்ட மசோதாக்களை கொண்டு வந்தார் பாரத பிரதமர் மோடி. ஆனால், இத்திட்டத்துக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள விவசாயிகளை தூண்டி விட்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட வைத்தனர். இதனால், அத்திட்டத்தை வாபஸ் பெற்று விட்டது மத்திய பா.ஜ.க. அரசு. எனினும், விவசாய சட்டம் விவசாயிகளுக்கு அற்புதமான திட்டம். ஆகவே, இச்சட்டத்தை வாபஸ் பெற்றிருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே கூறியது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு நல்ல சட்டத்தைத்தான் விவசாயிகளுக்கு கிடைக்க விடாமல் செய்து விட்டன எதிர்க்கட்சிகள்.

அதேசமயம், மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலைக் கண்ணீர் வடித்து வருகின்றன எதிர்க்கட்சிகள். ஆனால், விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்னென்னவெல்லாம் செய்திருக்கிறது என்பது குறித்து விவசாயிகளே நேரடியாக விளக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு விவசாயி 1.25 லட்சம் மதிப்புள்ள ரொட்டேட்டர் இயந்திரத்தை மத்திய பா.ஜ.க. அரசு தனக்கு 100 சதவிகித மானியத்தில் இலவசமாக வழங்கி இருப்பதாகக் கூறுகிறார்.

அதேபோல, மற்றொரு விவசாயி தனது 3 ஏக்கர் விவசாய நிலத்துக்கு 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகளை வழங்கி இருப்பதாகத் தெரிவிக்கிறார். இன்னொரு பெண் விவசாயியோ, 25,000 ரூபாய் மதிப்புள்ள தீவின அறுப்பு இயந்திரத்தை 75 சதவிகித மானியத்தில் மத்திய பா.ஜ.க. அரசு வழங்கி இருப்பதாகக் கூறி மெய்சிலிர்க்கிறார். அதேபோல, மற்றொரு விவசாயியோ, 50 சதவிகித மானியத்தில் தனது சூரிய ஒளி உலர்த்திக் கூடத்தை மத்திய அரசு அமைத்துக் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார். இவர்கள் 4 பேருமே மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் விவசாயிகளுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காக விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறி, விவசாயிகளை திசைதிருப்பி விட்டு வருகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.


Share it if you like it