மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வி குழுமத்தின் துணைத் தலைவரும், பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. வி.கே.சிங் மற்றும் தமிழக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன் மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்களை மனதார வரவேற்பதோடு, சாமானிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் அரசியல் பணிகளுக்கு, அவரது மேலான பங்களிப்பையும் கோருகிறேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வி குழுமத்தின் துணைத் தலைவரும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளருமான தொழிலதிபர் திரு. N. ராமேஸ்வரன் அவர்கள், மாவட்ட இணைச் செயலாளர் திரு. ரவிக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திரு.இராமசாமி, திரு. கவிக்குமார் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒன்றிய & நகர நிர்வாகிகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, இன்றைய தினம்,
தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணன் திரு.எச்.ராஜா அவர்களின் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அவர்கள் அனைவரையும் மனதார வரவேற்பதோடு, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நேர்மையான அரசியல் தமிழகத்தில் உருவாக, அவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் கோரிக்கொள்கிறேன்.
திரு.அஜித் பவார் அவர்கள் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சகோதரர் திரு. P.K. நரேஷ்குமார் அவர்கள், தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சி மீண்டும் தொடர, வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு.எல்.முருகன், மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.