ஹிந்து மதத்திற்கு மாறிய ’வாசிம் ரிஸ்வி’-யை காலணியால் அடித்தால் 11 லட்சம் பரிசு AIMIM கட்சியின் மூத்த தலைவர்..!

ஹிந்து மதத்திற்கு மாறிய ’வாசிம் ரிஸ்வி’-யை காலணியால் அடித்தால் 11 லட்சம் பரிசு AIMIM கட்சியின் மூத்த தலைவர்..!

Share it if you like it

தாய்மதம் திரும்பிய ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்விக்கு மிரட்டல்.

ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி ஹிந்து மதத்தின் மீது ஏற்பட்ட பிடிப்பின் காரணமாக சமீபத்தில் தாய் மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பினார். இதனை ஏற்றுக் கொள்ள விரும்பாத  இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், உட்பட பலர் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதனை எல்லாம் வாசிம் பொருட்படுத்தாமல் தனது கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ரஷீத் கான் அவர்கள் ஹிந்து மதத்திற்கு மாறிய வாசிம் ரிஸ்வி-யின் தலையை வெட்டி யார்? என்னிடம் கொண்டு வந்தாலும், அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பேன். அவர்களின் மீதான நீதிமன்ற வழக்குகளையும் எனது வழக்கறிஞர்களே பார்த்து கொள்வார்கள் என சர்ச்சைக்குறிய வகையில் அவர் பேசிய காணொளியை இன்று  சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இதனை தொடர்ந்து AIMIM கட்சியின் நிறுவனரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான  ரஷீத் அவர்கள் ஹிந்து மதத்திற்கு மாறிய (மதம் மாறிய பின்பு ஜிதேந்திர நாராயண் சுவாமி) வாசிம் ரிஸ்வி-யை ‘சமூக விரோதி’ என்றும்  ஹிந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயலும் அவரை தனது காலணியால் அடிப்பவருக்கு 11 ரூபாய் பரிசு வழங்குவதாக கூறியிருப்பது மீண்டும் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  


Share it if you like it