சமீபத்தில் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றார். இதனை மாலத்தீவு அமைச்சர்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர்.மாலத்தீவிற்கு சீன அரசு உதவி செய்வதால் அந்நாட்டில் உள்ள அரசு பதவியில் இருக்கும் பலர் இந்தியாவையும் பிரதமர் மோடியையும் மிக மோசமான விமர்சனம் செய்தது. இதனால் இந்தியர்கள் மாலத்தீவு செல்வதை நிறுத்திவிட்டு லட்சத்தீவுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.பின்னர் மாலத்தீவு அதிபர் இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் அரபி கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரிப்பதன் காரணமாக, லட்சத்தீவில் இரு விமான தளங்களை கட்டமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தென் சீன கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. இந்நிலையில், சீனாவின் சவாலை சமாளிக்கும் வகையில், யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் மினிகாய் தீவில் புதிய விமான தளமும், அகாட்டி தீவில் தற்போது இருக்கும் விமான தளத்தை விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விமான தளங்கள், ராணுவ தேவை மற்றும் பொது போக்குவரத்து ஆகிய இரண்டுக்கும் உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக, போர் விமானங்கள், ராணுவ சரக்கு போக்குவரத்து விமானங்கள் மற்றும ராணுவ ட்ரோன்கள் ஆகிய அனைத்திற்கும் பயன்படும் வகையிலும் கட்டமைக்கப்பட உள்ளது.
இந்த விமான தளங்களின் முழு கட்டுப்பாடும், இந்திய விமானப்படையிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அரபி கடல் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கவும், லட்சத்தீவில் சுற்றுலாவை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் லட்சத்தீவை கடல் வழியாக இணைக்கும் வகையில் பல்வேறு வகையான கடல் வழி பயணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கப்பல்கள் லட்சத்தீவுக்கு செல்லும் வகையில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லட்சத்தீவில் இனி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு புதிய ஹோட்டல்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது லட்சத்தீவிற்கு செல்ல வேண்டும் என்றால் அங்கு அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இந்த விதிமுறை முழுவதும் இனி ஆன்லைனில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் ரூபாய் 200 என்ற விலையில் பெர்மிட் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து ஆண்டுகளில் லட்சத்தீவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம்.