ஹிந்துக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய அசாவுதீன் ஓவைசி தம்பி அக்பருதீன் ஓவைசிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.
ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவராக இருப்பவர் அசாவுதீன் ஓவைசி. இவரது தம்பியும் எம்.எல்.ஏ.வுமான அக்பருதீன் ஒவைசி தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேச கூடிய நபர். இவரை, தெலுங்கானவை சேர்ந்த திருமாவளன் என்று கூறினால் 100% மிக பொறுத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு, ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு வழிபாட்டு முறைகளை இழிவுப்படுத்த கூடிய நபர்.
அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் நிர்மலில் (2012-ல்) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த காவல்துறையையும் 15 நிமிடம் அப்புறப்படுத்தினால், 25 கோடி முஸ்லிம்கள் 100 கோடி இந்துக்களை எப்படி? கொல்வது என்பதை காட்டுவேன் என ஆத்திரமூட்டும் வகையில் பேசி இருந்தார். இவரின் இந்த அருவருக்கதக்க பேச்சு, இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதுதவிர, இந்து தெய்வங்களையும் அப்பட்டமாக கேலி செய்து இருந்தார்.
“இந்துக்களுக்கு பல கடவுள்கள் உள்ளனர், ஒவ்வொரு எட்டு நாட்களுக்கும் புதிய கடவுள்கள் வருகிறார்கள் என்று கிண்டல் செய்து இருந்தார். இதுதவிர, பிரதமர் மோடியை பயங்கரவாதி அஜ்மல் கசாப்புடன் ஒப்பிட்டு, அவரை தூக்கிலிட வேண்டும் என அப்பாவி இஸ்லாமியர்களின் மனதில் வன்மத்தை விதைத்தவர். நாடு முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்தால், இந்த நாட்டை ஒரு முஸ்லீம் ஆளுவார், அப்போது பிரதமர் மோடியின் மரணம் உறுதி செய்யப்படும் என்று தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி பெருநகர நீதிமன்றத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம், அக்பருதீன் ஒவைசியை இந்த வழக்கில் இருந்து முற்றிலும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேச கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுதான், தற்பொழுது நாடு முழுவதும் பேசுப் பொருளாக மாறியுள்ளது.