அகில பாரதிய பிரதிநிதி சபா : சங்கத்தின் நூற்றாண்டு விழா !

அகில பாரதிய பிரதிநிதி சபா : சங்கத்தின் நூற்றாண்டு விழா !

Share it if you like it

அகில பாரதிய பிரதிநிதி சபாவில் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, சமுதாய நன்மைக்காக ஐந்து முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று அகில பாரத ப்ரச்சார் ப்ரமுக் ஸ்ரீ சுனில் அம்பேகர் ஜி தெரிவித்துள்ளார்.

அகில பாரத ப்ரச்சார் ப்ரமுக் ஸ்ரீ சுனில் அம்பேகர் ஜி அவர்கள் நாகபுரியில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி (நேற்று) செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கடந்த 99 ஆண்டுகளாக சமுதாயப் பணி செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு விஜயதசமியில், சங்கம் துவங்கி 100 ஆண்டுகள் பூரணமடைகிறது. சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை கருத்தில் கொண்டு, பல்வேறு விதமான யோசனைகளுடன் அகில பாரதிய பிரதிநிதி சபாவில், இது சம்பந்தமாக கருத்து பரிமாற்றங்கள் செய்யப்படும் எனவும்,
மார்ச் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், சங்க வேலைகளான குறிப்பாக ஷாகா பற்றிய ஆய்வுகளும், நூற்றாண்டு விழாவையொட்டி சங்கப் பணிகள் விரிவடைதல் என்ற கண்ணோட்டத்தில், ஒரு லட்சம் ஷாகாக்கள் இலக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பில், மேற்கு க்ஷேத்ர சங்கசாலக் டாக்டர். ஜெயந்தி பாய் பாடேஸியா உடன் இருந்தார்.

இந்த பைட்டக்கில் நாடு முழுவதும் இருந்து, 1529 பேர் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. பைட்டக்கில் சங்கத்தின் 32 அமைப்புகளும், ஏனைய சில சமூக அமைப்புகளும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். பைட்டக்கில் சேவிகா சமிதியின் மதிப்புமிகு சாந்தக்கா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஆலோக் குமார்ஜி ஆகியோர் பங்கெடுத்து கொள்கின்றனர். அனைத்து இயக்கங்களும், நாடு முழுவதும் நடைபெறக்கூடிய தங்களுடைய பணிகளும் மற்றும் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள், மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும். ஜனவரி மாதம் 22 ஆம் தேதி, அயோத்தியாவில் ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ராமலல்லாவினுடைய பிராணப் பிரதிஷ்டயின் போது, தேசம் முழுவதும் மிகுந்த உற்சாகமான சூழ்நிலை எழுந்துள்ளது. பாரத வரலாற்றில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது. பிரதிநிதி சபாவில் இது சம்பந்தமாக தீர்மானங்கள் கொண்டு வரப்படும்.

பைட்டக்கில் சங்கத்தின் சர்கார்யவாஹ் தேர்தலும், அதற்கு முன் 11 க்ஷேத்ர சங்கச்சாலகர் தேர்தலும் நடைபெறும். சமுதாய நலனுக்காக சில மாற்றங்கள் குறித்து தீவிரமாக யோசனை செய்யப்படும். ஐந்து வித மாற்றங்களாக சமுதாய சமத்துவம், குடும்பப் ப்ரபோதன், சுற்றுச்சூழல், “சுயம்” அடிப்படை ஏற்பாடு, விவசாய குடிமக்களின் கடமை, ஆகியவை விவாதிக்கப்படும். இவ்வருடம் அகலியாபாய் ஹோல்கர் அவர்களுடைய நூற்றாண்டு விழா சம்பந்தமாக சங்கத்தில் புதிய தீர்மானம் கொண்டு வரப்படும். 2024 மே மாதத்தில் இருந்து 2025 ஏப்ரல் மாதம் வரை சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். பிரதிநிதி சபாவில் சங்க சிக்ஷா வர்கவில் புதிய பாடத்திட்டத்திற்கான யோசனைகள் பற்றி விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் அகில பாரதிய சஹ ப்ரச்சார் ப்ரமுக் ஸ்ரீ நரேந்திர குமார் ஜி மற்றும் ஸ்ரீ ஆலோ குமார்ஜியும் இருந்தனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *