தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தெழு கிராமத்தில் குழந்தைகளுக்காக அங்கன்வாடி புதிதாக கட்டி முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திறப்பு விழாவினை முன்னிட்டு பால் காய்ச்சி பொதுமக்களுக்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் இந்த அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் குழந்தைகளை புதிதாக திறக்கப்பட்ட அங்கன்வாடிக்கு பெற்றோர்கள் அழைத்து வந்த நிலையில் அங்கிருந்த கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த ஜன்னல்கள் உடைந்தும் சுவர்கள் பெயர்ந்து தண்ணீர் குழாயின் மீது விழுந்தும் பார்ப்பதற்கே மிகவும் அலங்கோலமான நிலையில் இருந்தது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கே அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையம் பூட்டப்பட்டது.மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை வைத்து சென்றுள்ளனர்.
12 லட்சத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தால் எந்த லட்சணத்தில் அரசு இதனை கட்டியிருப்பார்கள். குழந்தைகள் அதில் இருக்கும்பொழுது கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால் குழந்தைகளின் நிலைமை என்னவாயிருக்கும் ? அவர்களின் பெற்றோர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லும் ? இதில் கூடவா ஊழல் செய்ய வேண்டும் ? குழந்தைகளின் உயிரை துச்சமென நினைக்கும் திமுக அரசை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.