அதிக ஜி.எஸ்.டி., வருவாய் தரும், எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழகம் போன்ற மாநிலங்களின் கோரிக்கைகளை, அரசியல் உள்நோக்கத்தோடு பார்ப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக காங்., தலைவர் அழகிரி கூறி உள்ளார்
ஏற்கனவே தமிழக நிதியமைச்சர் சமீபத்தில் GST கவுன்சிலின் 43வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார் அப்பொழுது
*ஜி.எஸ்.டி., கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு மக்களை தொகை அடிப்படையில் வாக்குகளை வழங்க வேண்டும்.
*சிறிய மாநிலதின் நிதி அமைச்சரை அதிக நேரமும், பெரிய மாநில நிதி அமைச்சரை குறைந்த நேரமும் பேச அனுமதிக்கின்றனர்
*தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள், அதிகளவு வரிப்பணத்தை விட்டு தருகின்றன
போன்ற குற்றசாட்டுகளை முன்வைத்தார் இவை அனைத்தும் அடிப்படை அறிவுகூட இல்லாத கேள்வி என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார் காரணம் எந்த மாநிலத்தில் அதிக நுகர்வு இருக்கிறதோ அந்த மாநிலம் தான் அதிக வரி வருவாய் இருக்கும் அதன் படி தான் GST செலுத்த வேண்டி இருக்கும், அதே போல் GST கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம், அதே போல் மாநில வரிவருவாய் அடிப்படையை அழகாக வைத்தே ஒரு வாக்கு என்பதை நிர்ணயித்துள்ளனர் இது போன்ற சாதாரண விஷயம் கூட தெரியாமல் தியாகராஜன், தன் கருத்துகளை புரட்சிகரமாகச் சொல்கிறோம் என்ற நினைப்பிலும் ‘முதல்வர் ஸ்டாலினை விட, எனக்கு தான் மூளை அதிகம்’ எனக் காட்டிக் கொள்ளும் முயற்சி ஆழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல் பேசி இருக்கிறார்
இந்த விஷயங்களை கூட தெரிந்துகொள்ளாமல் தமிழக காங்., தலைவர் அழகிரி கூட்டணியை காப்பதாக நினைத்துக்கொண்டு தானும் வாயை கொடுத்து மாட்டி கொண்டுள்ளார்.