நாக்பூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதீய பிரதிநிதி சபா !

நாக்பூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதீய பிரதிநிதி சபா !

Share it if you like it

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதீய பிரதிநிதி சபா இந்த ஆண்டு மார்ச் 15 முதல் 17 ஆம் தேதி வரை, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் வளாகத்தில் உள்ள ஸ்மிருதி பவனில் நடைபெறுவதாக அகில பாரத ஊடகத் துறையின் பொறுப்பாளர் (ப்ரச்சார் பிரமுக்) திரு சுனில் அம்பேகர் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்.-ன் அகில பாரதீய பிரதிநிதி சபா நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது, ​​2023-24 ஆம் ஆண்டில் சங்கம் செய்த அனைத்து பணிகள் மற்றும் சேவை காரியங்கள் மதிப்பாய்வு செய்யப்படும் எனவும், 2024-25 ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் திட்டம் குறித்தும் விரிவான விவாதம் நடைபெறும் எனவும், இந்த ஆண்டிற்கான பரமபூஜனிய சர்சங்கசாலக் ஜி மற்றும் அகில பாரதீய காரியகர்த்தாக்களின் பிரவாஸ் குறித்து விவாதம் நடைபெறும் எனவும் தெரிவித்து உள்ளார். மேலும், ஸ்வயம்சேவகர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய சங்க சிக்ஷா வர்க திட்டத்தை செயல் படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும்,

பணி விரிவாக்கத் திட்டத்தை வலுப்படுத்துவதுடன் ஆர்.எஸ்.எஸ் -ன் நூற்றாண்டு ஆண்டுக்கான (2025) முன் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் விவாதிக்கப்படுவதுடன், முக்கிய பிரச்னைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சங்கத்தின் பிரதிநிதி சபா ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. நாக்பூரில் பிரதிநிதி சபாவின் மூன்றாவது வருடம் நடைபெறும்.

இந்த அமர்வில் 45 ப்ராந்தங்களில் இருந்தும் 1500 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.

பரமபூஜனிய சர்சங்சாலக் டாக்டர் மோகன் ஜி பகவத், மரியாதைக்குரிய சர்கார்யவாஹ் திரு தத்தாத்ரேய ஹோசபலே, அனைத்து சஹ் சர்கார்யவாக், அகில பாரதிய காரியகாரிணி, க்ஷேத்ரா மற்றும் ப்ராந்த் காரியகாரிணி, அகில பாரதீய பிரதிநிதிகள், அனைத்து விபாக் ப்ரச்சாரக் மற்றும் அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் காரியகர்த்தர்கள் கலந்துக் கொள்வார்கள்.


Share it if you like it