நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற புறநகர் பேருந்தில் அரசு காவலர் ஆறுமுகப்பாண்டி ஏறியுள்ளார். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் பயணசீட்டை வாங்குங்க என்று சொன்னதற்கு நான் அரசு அதிகாரி, பயணசீட்டு வாங்கு முடியாது என்று கூறி பயணசீட்டு வாங்காமல் பயணித்து உள்ளார். இதனால் நடத்துனர் பயணசீட்டு எடுக்க வேண்டும் என்று அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஆனால் அதற்கு கொஞ்சமும் சட்டை செய்யாமல் அரசு அதிகாரி என்ற திமிருடன் பயணசீட்டு வாங்காமல் பயணித்துள்ளார். இதனை அடுத்து வாரன்ட் இருக்கா என்று நடத்துனர் கேட்க அதெல்லாம் என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார் அந்த காவலர். வாரண்ட் இல்லை என்றால் பயணசீட்டு எடுங்கள், இல்லை எனில் பேருந்தை விட்டு கீழே இறங்குங்கள் என்று நடத்துனர் கூறினார்.
ஆனால் தான் இறங்க முடியாதென்று கடைசி வரை பேருந்திலே இருந்து வாகு வாதம் செய்துள்ளார் அந்த காவலர். சுற்றி இருந்த பயணிகளும் நடத்துனருக்கு ஆதரவு தெரிவித்து காவலரை பயண சீட்டு எடுக்க சொல்லியும் மிகவும் பிடிவாதமாக பயணசீட்டு இல்லாமலும் பேருந்தை விட்டு இறங்காமலும் அட்டகாசம் செய்துள்ளார். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்று போக்குவத்துத்துறை அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்த நாங்குநேரி காவலர் ஆறுமுகப்பாண்டி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.