சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் தற்போது கல்வித் தந்தையாகி விட்டார்கள் – அண்ணாமலை !

சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் தற்போது கல்வித் தந்தையாகி விட்டார்கள் – அண்ணாமலை !

Share it if you like it

இந்தியா முழுவதுமே மாநில அரசுகள், மத்திய அரசின் இலவசக் கல்வி வழங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கேட்கும்போது, தமிழக அரசு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை வேண்டாம் என்கிறது என்று அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்துள்ளார்.இதுதொடர்பாக X பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாவது :-

சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் தற்போது கல்வித் தந்தையாகிவிட்டார்கள். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏழை, எளிய மாணவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியைக் கொடுத்து, அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள். மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வி அமைச்சர். அவருக்கு ஏழை மாணவர்களுக்கான கல்வித் தேவைகள் புரிய வாய்ப்பில்லை. இந்தியா முழுவதுமே மாநில அரசுகள், மத்திய அரசின் இலவசக் கல்வி வழங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கேட்கும்போது, தமிழக அரசு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை வேண்டாம் என்கிறது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது நமது நம்பிக்கை. திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரத்தை மறைக்கும் வகையில், வணிக வளாகம் கட்டுவதற்காக, கோவிலின் மூலதன நிதியில் இருந்து, 6.4 கோடி ரூபாயை எடுத்துள்ளது திமுக அரசு. கோவில் மூலதன நிதியை, எந்த காரியத்துக்காகவும் எடுக்க, யாருக்கும் அனுமதி கிடையாது. இது தான் அறநிலையத்துறை சட்டம். ஆனாலும் கோவிலில் ராஜகோபத்திற்கு எதிரே கோவிலை மறைத்து ஒரு வணிக வளாகம் கட்ட முற்பட்டது திமுக. தன்னார்வலர்கள் மற்றும் பாஜகவினர் மேற்கொண்ட முயற்சியினால், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இதற்கு தடை விதித்து விட்டது.

சனாதனத்தை அழிப்போம் என்று சொல்லும் திமுகவினருக்கு, திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் எழுச்சி கண்ணை உறுத்திக்கொண்டே இருக்கிறது. திருவண்ணாமலை செங்கம் சாலையில், ஆணாய்பிறந்தான் கிராமத்தில், கார் நிற்கவைக்க இடம் தேவை என்பதற்காக, காட்டு சிவா சுவாமிகளுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள 13 ஜீவ சமாதிகளையும் குடிநீர் கிணற்றையும் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டது இந்த ஹிந்து விரோத திமுக அரசு.

அநியாயமும் அராஜகமும் திமுகவினர் ரத்தத்தில் ஊறியிருப்பது. கடந்த ஆண்டு, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் என்பவர் தன் குடும்பத்துடன், நீண்ட நேரம் உண்ணாமுலையம்மன் கருவறை முன்பு நின்று கொண்டிருந்ததால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஒதுங்கி நிற்குமாறு கூறிய பெண் ஆய்வாளரை, கோயில் நிர்வாகமே தங்களிடம்தான் இருக்கிறது என்று கூறி அடித்து இருக்கிறார். இது சம்மந்தமாக தமிழக பாஜக குரல் கொடுத்த பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனு மூன்று முறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டும், இன்று வரை கைது செய்யவிடாமல் காவல்துறையினரின் கைகளை கட்டிப்போட்டுவைத்திருக்கிறார்கள். தங்கள் சகோதரிக்கு நியாயம் கிடைக்க, திருவண்ணாமலை காவல்துறையினரால் எதுவும் செய்யமுடியவில்லை என்பது வேதனைக்குரியது.


Share it if you like it