ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை எட்டிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையையும் படைத்துள்ளார் விராட் கோலி. இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கரின் முன்னிலையில் அதுவும் அவரது சொந்த மைதானத்திலேயே விராட் கோலி நிகழ்த்தியது, அத்தருணத்தை மேலும் அழகாக்கியது. இதே மைதானத்தில்தான் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கடைசியாக பேட்டிங் செய்தார். அதே நாளில் தற்போது விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி விராட் கோலி அவரை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்
விராட் கோலி அவர் தனது 50வது ODI சதத்தை அடித்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த விளையாட்டுத்திறனை வரையறுக்கும் சிறந்த மற்றும் விடாமுயற்சியின் உணர்வையும் எடுத்துக்காட்டுகிறார்.
இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் அவரது நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான திறமைக்கு ஒரு சான்றாகும்.
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எதிர்கால சந்ததியினருக்கு அவர் ஒரு அளவுகோல் நிர்ணயித்துக்கொண்டே இருக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிங்” விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில்மூலம் 50வது சதம் எடுத்து “கிரிக்கெட் கடவுள்” என்கிற முந்தைய சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விளையாட்டின் மீதான ஆர்வம் மற்றும் நமது தேசத்தின் மீதான அன்பு ஆகியவை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு இளம் கிரிக்கெட் வீரருக்கும் ஒரு உத்வேகம். இவ்வாறு விராட் கோலியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.