வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் பதிப்பின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். உலகின் பிற நாடுகளில் தேசத்திற்கு அரசியல் வரையறை இருந்தாலும், பாரதமானது ஆன்மீக நம்பிக்கைகள் நிறைந்த தேசமாக உள்ளது என்றார். ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார் போன்ற மகான்களால் பாரதம் ஒன்றுபட்டுள்ளது, அவர்கள் தங்கள் பயணங்களால் மக்களிடையே தேசிய உணர்வை எழுப்பினர். துறவிகள் பல நூற்றாண்டுகளாக காசிக்கு வருகை தருகிறார்கள்.
இந்த பயணங்கள் மற்றும் யாத்திரைகள் மூலம், இந்தியா பல்லாயிரக்கணக்கானோரின் தேசமாக உறுதியுடனும், அழியாமலும் உள்ளது. மேலும் காசி தமிழ் சங்கமம் ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரதத்தின் உணர்வை வலுப்படுத்துகிறது என தெரிவித்தார். முன்னதாக, பிரெய்லி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய தமிழ் நூல்கள் குறித்த பல்வேறு புத்தகங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து காசி தமிழ் சங்கம் விரைவு ரயிலையும் அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாராந்திர ரயில் கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையே நேரடி ரயில் சேவையாக தொடங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக AI தொழில்நுட்பம் மூலம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் முதல் மூன்று நிமிடங்களுக்கு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். தனது உரையின் தொடக்கத்தில், தமிழகத்திலிருந்து வந்த விருந்தினர்களை ‘வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு’ என்று வாழ்த்தினார்.விருந்தினரைத் தன் குடும்பம் என்று வர்ணித்த அவர், தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவது என்பது மகாதேவரின் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு வருவதைக் குறிக்கிறது. தமிழகத்தில் இருந்து காசிக்கு வருவது என்பது மதுரை மீனாட்சியிலிருந்து காசி விசாலாக்ஷிக்கு வருவதைக் குறிக்கும். தமிழக மக்களுக்கும் காசிக்கும் இடையே உள்ள அன்பு தனித்துவமானது. காசி தமிழ்ச் சங்கத்தின் குரல் உலகம் முழுவதும் பரவுகிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.
சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பரஸ்பர உரையாடல் மற்றும் தொடர்புக்கான சிறந்த தளமாக காசி தமிழ் சங்கமம் மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த சங்கமம் வெற்றிபெற BHU மற்றும் IIT மெட்ராஸ் ஒன்றிணைந்துள்ளன. வாரணாசியின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கணிதத்தில் ஆன்லைன் ஆதரவை வழங்க ஐஐடி மெட்ராஸ் வித்யா சக்தி முயற்சியைத் தொடங்கியுள்ளது. ஒரு வருடத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் உணர்ச்சி மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளுக்கு சாட்சியமளிக்கின்றன என பிரதமர் குறிப்பிட்டார். புனித செங்கோல் நிறுவப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்குள் நாங்கள் நுழைந்தபோது” ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரதத்தின் இந்த உணர்வு தெரியும் என்று பிரதமர் கூறினார். பேச்சுவழக்குகள், மொழிகள், உடைகள், உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை என பலவகைகள் இருந்தாலும், இந்தியர்கள் ஒன்றுதான் என்றார். இந்தியாவின் பன்முகத்தன்மை அந்த ஆன்மீக உணர்வில் வேரூன்றியுள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், “ஒவ்வொரு தண்ணீரும் கங்கை நீர் என்றும், இந்தியாவின் ஒவ்வொரு நிலமும் காசி என்றும் தமிழில் கூறப்பட்டுள்ளது என்றார்.
மேலும், “நமது நம்பிக்கையின் மையமான காசி வடக்கிலிருந்து டையெடுப்பாளர்களால் தாக்கப்பட்டபோது, காசியை அழிக்க முடியாது என்று தென்காசி மற்றும் சிவகாசியில் கோயில்களைக் கட்டினர், நீங்கள் உலகில் எந்த நாகரீகத்தையும் பார்க்கலாம். பன்முகத்தன்மையில் இவ்வளவு எளிதான மற்றும் உன்னதமான நெருக்கத்தை எங்கும் காண முடியாது. சமீபத்தில் G20 உச்சி மாநாட்டின் போது, இந்தியாவின் இந்த பன்முகத்தன்மையைக் கண்டு உலகமே வியந்தது என பிரதமர் தெரிவித்தார். காசி தமிழ்ச் சங்கத்தின் மூலம்,இளைஞர்களிடையே தங்களது பழங்கால மரபுகள் மீதான உற்சாகம் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் காசிக்கு வருகின்றனர். காசி தமிழ் சங்கமத்திற்கு வரும் மக்களுக்காக அயோத்தியில் தரிசனம் செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச அரசு செய்துள்ளது என்று கூறினார். காசி மற்றும் மதுரையை உதாரணமாக கூறிய பிரதமர், வைகைக் கரையில் மதுரையும், கங்கைக் கரையில் காசியும் அமைந்துள்ள பெரிய கோயில் நகரங்கள் மற்றும் புனிதத் தலங்கள் என்று கூறினார். வைகை, கங்கை இரண்டும் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். காசி தமிழ் சங்கத்தின் இந்த சங்கமம், நாட்டின் பாரம்பரியத்தை வலுப்படுத்தவும், ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரதத்தின் உணர்வை வலுப்படுத்தவும் தொடரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாவது :- நமது மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களால் நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் பலனடைவதே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முன்னுரிமையாகும். நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் இன்று, காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் பேசும்போது, தமது உரையின் நேரடி மொழிபெயர்ப்பை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முயற்சித்தார். நமது மாண்புமிகு பிரதமரின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் கேட்கும் வாய்ப்பு, எனக்கும், நமது முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்னன் அவர்கள், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களுக்கும் மற்றும் தமிழ் மாணவர்களுக்கும் கிடைத்தது ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள், முதன்முறையாக இந்த செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த தொழில்நுட்பம், மொழி வேறுபாட்டினை நீக்கி, தேச நலனுக்கான நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் தொலை நோக்குப்பார்வையின் பலன்கள், தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் அடைவதை உறுதி செய்யும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.