மத மோதல் பதிவு: முகமது ஜுபைர் கைது!

மத மோதல் பதிவு: முகமது ஜுபைர் கைது!

Share it if you like it

இந்தியாவில் மத மோதலைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்த முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Alt news என்னும் செய்தி நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனர்களில் ஒருவர் முகமது ஜுபைர். இவர் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் நிறுவனம் வைத்திருப்பதாகக் கூறிக் கொண்டு, ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். மேலும், தனது யூடியூப் சேனலிலும் தொடர்ந்து ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் அவதூறு செய்யும் வகையில், பதிவுகளை வெளியிட்டு வந்தார். குறிப்பாக, 2018-ம் ஆண்டு மத மோதலைத் தூண்டும் வகையில் இவர் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதேபோல, 2020-ம் ஆண்டு இவரது பதிவுக்கு எதிர்வினையாற்றிய ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அளித்த பதிலில், மேற்கண்ட முதியவரின் படத்தோடு, அவரது பேத்தியின் போட்டோவையும் போட்டு, அவதூறாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக ஜுபைர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்று முன்ஜாமீன் வாங்கி வைத்திருந்தார். இதனிடையே, கடந்த மே மாதம் ஹிந்து மக்களின் கவனத்தை பெரியளவில் ஈர்த்திருந்த 3 மதத் தலைவர்கள் பற்றி குறிப்பிட்டு, இவர்கள் ‘வெறுக்கத்தக்கவர்கள்’ என்று ஜுபைர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக, அவர் மீது உத்தர பிரதேச போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில், ஹிந்து கடவுளான சிவபெருமானை முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த தஸ்லிம் தெஹ்ரான் என்பவர் இழிவாகப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, முஸ்லிம்களின் மத புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு கருத்தை சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் தெஹ்ரான் பேசியதை எடிட் செய்து விட்டு, முகமது நபி பற்றி நுபுர் ஷர்மா பேசியதை மட்டும் கட் செய்து, வீடியோ வெளியிட்டு இஸ்லாமியர்களிடையே வெறுப்பை விதைத்தார். மேலும், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை டேக் செய்து பதிவுகளை வெளியிட்டார். இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது.

இவ்வாறு இந்திய நாட்டில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிராகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும், மத மோதலை தூண்டும் வகையிலும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்த முகமது ஜுபைரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்திருக்கிறார்கள். தொடர்ந்து, ஜுபைரை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லி காவல்துறையினர் ஒரு நாள் ரிமாண்டில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். ஜுபைர் சார்பாக பெயில் கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், முகமது ஜுபைர் 2018-ம் ஆண்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி இழிவாக பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் பயனாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், “ஜுபைரால் பதியப்பட்ட அந்தப் பதிவு ஒரு மதத்தினரைக் காயப்படுத்துவதாகவும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது. அந்த வெறுப்புணர்வு சமூகச் சீர்கேட்டை ஏற்படுத்தலாம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை சமயத்தில் போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் தற்போது ஜுபைரைக் கைதுசெய்திருக்கிறோம்” என்று டெல்லி காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். ஆனால், ஜுபைரை ஏதோ போராளியைப் போல சித்தரித்து எதிர்க்கட்சிகளும், இடது சாரி அமைப்புகளும் கூக்குரல் எழுப்பி வருகின்றன.


Share it if you like it