வாழும் அம்பேத்கர் திருமாவளவன் என பிரபல பாடலாசிரியர் கபிலன் பேசிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், நாட்டிற்கு எதிராகவும் பா.ஜ.க.விற்கு எதிராகவும் தொடர்ந்து பேச கூடியவர். கட்சிவேறுபாடு, கொள்கை வேறுபாடு என அனைத்தையும் கடந்து, பாரதப் பிரதமர் மோடி மீது வன்மம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. மோடி வெறுப்பை திட்டமிட்டே தமிழகத்தில் நாங்கள் கட்டமைத்தோம் என திருமாவளவன் பேசிய காணொளி இதற்கு, சிறந்த உதாரணம். நாட்டு மக்களுக்காக இரவு, பகல் என்று பாராமல் நேர்மையாக உழைத்து வரும் பிரதமர் மோடி மீது இன்று வரை இவர் சேற்றை வாரி இறைத்து வருவதை வழக்கமாக கொண்டவர்.
பட்டியல் சமூக மக்களின் தலைவனாக தம்மை காட்டிக் கொள்ளும் திருமாவளவன், அவர் சார்ந்த சமுதாயத்தினர் தி.மு.க.வினரால் அவமதிக்கப்படும் பொழுது கண்டும் காணாமல் கடந்து செல்வது இவரின் வழக்கம். அந்த வகையில், தி.மு.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி பட்டியலின மக்களை பற்றி மிக கீழ்தரமாக விமர்சனம் செய்த பொழுது மெளனம். அதே போன்று நாங்கள் என்ன? இரண்டாம் தர குடிமக்களாக என்று எம்.பி தயாநிதி மாறன் கூறிய பொழுது அதே கள்ள மெளனம். இப்படியாக, தன் சமூகத்தை சார்ந்த மக்களுக்கு ஏற்படும் அநீதி பற்றி இன்று வரை இவர் வாய் திறப்பது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஆனால், பட்டியல் சமூக மக்களின் உண்மையான பாதுகாவலரான மோடியை பிரபல இசை அமைப்பாளர் இளைய ராஜா அம்பேத்காருடன் ஒப்பிட்டு பாராட்டியதற்கு தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தார். ஆனால், இதே தமிழகத்தை சேர்ந்த அதுவும் ஏழை அருந்ததியர் குடும்பத்தில் பிறந்த டாக்டர் எல்.முருகனை பாரதப் பிரதமர் மோடி மத்திய அமைச்சராக்கிய பொழுது வாழ்த்து கூட தெரிவிக்காதவர் இவர். 75 ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு சம்பவம் நடந்தது இல்லை. இதனை சாதித்து காட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி. அதே போல, பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் எட்டுப் பேர், ஓ.பி.சி-யில் 28 பேரை மத்திய அமைச்சராக்கிய ஒரே கட்சி பா.ஜ.க என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
அந்த வகையில், இதை எல்லாம் கருத்தில் கொண்டே இசைஞானி இளைய ராஜா அண்ணல் அம்பேத்காருடன் பாரதப் பிரதமரை ஒப்பிட்டு பேசி இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான், பிரபல பாடலாசிரியர் கபிலன் வாழும் அம்பேத்கர் என்று திருமாவளவனை புகழ்ந்து பேசி இருப்பது பட்டியல் சமூக மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் 6 சீட்டுக்காக பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை தி.மு.க.விடம் அடமானம் வைக்கும் இவரா வாழும் அம்பேத்கார் என நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

