நான் ரெடி… நீங்க ரெடியா? வி.சி.க.வுக்கு அண்ணாமலை சவால்!

நான் ரெடி… நீங்க ரெடியா? வி.சி.க.வுக்கு அண்ணாமலை சவால்!

Share it if you like it

விவாதத்துக்கு நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாராக இருந்தால் சொல்லுங்கள். எந்த இடத்துக்கு எப்போது வர வேண்டுமோ, அந்த இடத்துக்கு வருகிறேன் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வி.சி.க.வினருக்கு நேரடியாக சவால் விடுத்திருக்கிறார்.

டெல்லியைச் சேர்ந்த ப்ளூ கிராஃப் பவுன்டேசன் என்கிற நிறுவனம், ‘அம்பேத்கரும் மோடியும்: சிந்தனைவாதியும் செயல் நாயகனும்’ என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை தமிழப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டது. இப்புத்தகத்துக்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில், முத்தலாக், பெண்கள் முன்னேற்றம் உட்பட மோடியின் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி இருக்கும் இசைஞானி, அம்பேத்கருக்கு இணையானவர் மோடி என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு தி.மு.க.வினரும், திருமாவளவன் உள்ளிட்ட அம்பேத்கரிஸ்ட்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இசைஞானி இளையராஜா அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆர்.எஸ்.எஸ். குறித்து அம்பேத்கர் தெரிவித்த கருத்து தொடர்பாக விவாதிக்கத் தயாரா என்று சவால் விட்டிருந்தார் தமிழக பா.ஜ.க. தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை. ஆனால், அண்ணாமலையின் சவாலை எதிர்கொள்ள துணிவில்லாத திருமா, மோடி, அமித்ஷாவுடன் விவாதிக்க தயார் என்று சொல்லி கழுகிற மீனில் நழுவுகிற மீனாக எஸ்கேப்பானார். ஆனாலும், அண்ணாமலை விடவில்லை. எனவே, அண்ணாமலை அரசியலில் சப் ஜூனியர். ஆகவே, அவருடன் விவாதிக்க எனது கட்சியிலிருந்து ஒரு சப் ஜூனியரை அனுப்புகிறேன் என்று சாக்குப்போக்குச் சொல்லி மீண்டும் நழுவினார்.

இந்த நிலையில்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சங்கத்தமிழன் என்பவர் அண்ணாமலைக்கு போன் செய்து விவாதத்துக்குத் தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார். (ஒருவேளை இவர்தான் அந்தக் கட்சியின் சப் ஜூனியரோ என்னவோ). இதை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்துக்கு வருவதால் ஏப்ரல் 26-ம் தேதி வைத்துக் கொள்ளலாம். எங்கு எப்போது வரவேண்டும் என்று சொல்லுங்கள். அங்கு நான் வருகிறேன் என்று கூறியிருந்தார்.

அதற்கு, சப் ஜூனியர் சங்கத்தமிழன், வரும்போது அம்பேத்கருடைய தொகுப்பு எண் 8 புத்தகத்தை படித்து விட்டு வரவும் என்று அண்ணாமலையிடம் சொன்னஆர். பதிலுக்கு அண்ணாமலையும், இந்துத்துவா அம்பேத்கர் என்கிற புத்தகத்தை படித்து விட்டு வாருங்கள் என்று கூறியிருந்தார். இதனிடையே, வி.சி.க.வைச் சேர்ந்த சிலர், அண்ணாமலைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கம்பு சுத்தினர். இதையடுத்து, ஆவேசமான அண்ணாமலை விவாதத்துக்கு நான் தயாராக இருக்கிறேன். வி.சி.க.வினர் என்னென்ன புத்தகங்களை கொடுக்க வேண்டுமோ, அப்புத்தகங்களை கமலாலயத்தில் வந்து கொடுக்கலாம். அதேபோல, கமலாலயத்தில் இருந்து நாங்களும் புத்தகத்தை தருகிறோம். அதையும் படித்து விட்டு வாருங்கள் விவாதம் செய்வோம் என்று கூறியிருந்தார்.

இந்த சவால் விவகாரம்தான் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாளை 26-ம் தேதி என்பதால் சொன்னபடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விவாதத்துக்கு வருவார்களா அல்லது திருமாவளவனைப் போல ஏதாவது சாக்குபோக்கு சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்களா என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது.


Share it if you like it