அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : ராகுல் காந்தியின் கவலை – “ஒரு தலித் பெண் மிஸ் இந்தியா ஆகவில்லையே !

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : ராகுல் காந்தியின் கவலை – “ஒரு தலித் பெண் மிஸ் இந்தியா ஆகவில்லையே !

Share it if you like it

பிரயாக்ராஜ் நகரத்துல இப்ப காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிருக்கார். அவர் என்ன பேசினார்னு சொல்றேன், சிரிக்காம கேளுங்கோ:

“இதுவரை மிஸ் இந்தியா பட்டம் நிறைய பேருக்குக் கிடைச்சதே, அதுல தலித், பழங்குடிகள், ஓபிசி மனுஷா அப்படின்னு எந்தப் பொண்ணுக்காவது கிடைச்சதான்னு தேடிப் பாத்தேன். அந்தப் பட்டம் அந்த மாதிரிப் பொண்ணுக்குக் கிடைக்கவே இல்லை.”

இப்பிடி அச்சுப்பிச்சு மாதிரி பேசற தலைவர்கள்ள ராகுல் காந்திக்குத்தான் முதல் பிரைஸ் குடுக்கணும். அவர் ஏன் அச்சுப்பிச்சுன்னு சுருக்கமா சொல்லட்டா?

விவரம் தெரியாதவான்னு சில மனுஷா இருக்கா. தனக்கு விவரம் தெரியாதுன்னு அவாளுக்கே ஓரளவு புரிஞ்சிருக்கும். அதுனால, தனக்குத் தெரியாத விஷயத்தைப் பத்தி அவா முந்திண்டு வாயைத் திறக்க மாட்டா. கம்முனு இருப்பா.

அச்சுபிச்சுன்னு சில மனுஷா இருக்கா. அவா மக்கா இருப்பா. இருந்தாலும், தான் ஒரு மக்குன்னு அவாளுக்குப் புரியாது. தான் பெரிய பிரகஸ்பதின்னு நினைச்சுண்டு, அவா பாட்டுக்குத் தத்துப் பித்துன்னு பேசிண்டிருப்பா. ராகுல் காந்தி அச்சுப்பிச்சு ரகம்னு அவர் பேச்சுலயே காட்டிக்கறார் இல்லையா?

நம்ம நாடு வசதிப் பட்ட நாடு இல்லை. நிறைய மனுஷா ஏழ்மைல, குறைஞ்ச வருமானத்துல ஜீவனம் பண்றா. நல்ல கல்வி பரவலா கிடைக்கறது இல்லை. வேலை வாய்ப்பும் இளைஞர்களுக்கு அதிகம் வேண்டிருக்கு. பொண்கள் பாதுகாப்பு, பொண்கள் வளர்ச்சி, இதுலெல்லாம் நம்ம நிறைய முன்னேறணும். இதான் நாட்டு நிலைமை.

இப்பிடியான தேசத்துல, ‘நான் மிஸ் இந்தியாவா வரலயே’ன்னு எந்த யவதி ஏங்கிண்டிருப்பா? 18-லேருந்து 22 வயசான எந்தப் பொண்ணோட அம்மா-அப்பா தன் பொண்ணுக்காக வெட்டியா ‘மிஸ் இந்தியா’ கனவெல்லாம் வெச்சுப்பா? மேலை நாடுகள்ள கூட, அழகிப் போட்டிக்குன்னு ஏத்த சில பொண்கள்தான் அழகிப் பட்டத்துக்கு ஆசைப்படும். மத்தவா அவா வேலையைப் பாத்துண்டு போவா. ஏதாவது புரியறதா ராகுல் காந்திக்கு?

ராகுல் காந்தி குடும்பத்துல இருக்கற பொண்களை அவரே வேணும்னாலும் கேட்டுத் தெரிஞ்சிக்கட்டும். “நீங்கள்ளாம் சின்ன வயசா இருந்தப்போ அழகிப் போட்டி கிரீடம் வேணும்னு ஆசைப் பட்டேளா?” அப்பிடின்னு. இதைக் கேட்டார்னா அவர் வாயிலயே அவா போடுவா. 54 வயசாகியும் ஒரு மனுஷன் இதைக் கூட புரிஞ்சுக்காம மேடைல பேசினார்னா, அவர் சரியான அச்சுப்பிச்சுதான்.

ராகுல் காந்தியோட அரசியல் சிந்தனையே கோணல், கொனஷ்டை. என்னன்னா, வாழ்க்கை வசதிகள் குறைவா இருக்கற இந்தியர்கள், ஜீவனத்துக்கே அல்லாடற இந்தியர்கள், கொஞ்சம் அப்பாவிகள்தான். அந்த மக்களுக்கு நல்லது பண்ணி, நிறையக் காரியம் பண்ணி, தேர்தல்ல அவா ஓட்டை வாங்கறதை விட, ஏமாத்துப் பேச்சுப் பேசி அவா ஓட்டை வாங்கறது கோல்மால் அரசியல்வாதிகளுக்கு ஈஸி. அதை ராகுல் காந்தி பண்ணப் பாக்கறார். அதான் விஷயம்.

இந்திய ஜனத்தொகைல தலித்துகள், பழங்குடிகள், ஓபிசி, எல்லாருமா கிட்டத்தட்ட அறுபது எழுபது சதவிகிதம் இருப்பா அப்பிடின்னு தகவல் வருது. இத்தனை பேரோட ஓட்டையும் ஒரு நிமிஷப் பேச்சுல பிடிச்சுப் பாக்கெட்ல வைச்சுக்கலாம்னு ராகுல் காந்தி நினைச்சிருக்கணும். அதான் அவர் உதவாக்கறைப் பேச்சுக்குக் காரணம்.

மிஸ் இந்தியா அழகிப் போட்டின்னா, அதுல முதல் பிரைஸ் ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். அந்தப் போட்டியும் தனியார் நடத்தறது, அது அரசாங்கம் நடத்தறது இல்லை. அறுபது எழுபது சதவிகித ஜனங்கள் எல்லாருக்கும், அதுல உள்ள எல்லா யுவதிகளுக்கும், நல்ல பாதுகாப்பு, நல்ல கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம், நல்ல சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், நல்ல வருமானம், இதெல்லாம் முக்கியமா, இல்லை அந்த மக்கள்ள ஒரே ஒரு பொண்ணு மிஸ் இந்தியாவா வர்றது முக்கியமா?

“தலித், பழங்குடி, ஓபிசி ஜனங்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, கல்வி, வாழ்க்கை வசதிகள் இன்னும் பெரிசா கிடைக்கலை. இது அக்கிரமம், அநியாயம்” அப்படின்னு ராகுல் காந்தி பேசி இருந்தார்னா, அதுல சத்து இருக்கும். அவர் அப்படிப் பேசினா, ‘இது வரை 50 வருஷத்துக்கு மேல மத்திய அரசாங்கம் நடத்தின காங்கிரஸ் கட்சி என்ன பண்ணினது’ன்னு கேள்வி வருமே? அதுக்கு அந்தக் கட்சி பதில் சொல்ல முடியாதே? அதுனால, தனியார் நடத்தற மிஸ் இந்தியா போட்டில தலித், பழங்குடிகள், ஓபிசி பொண்கள் யாருக்கும் கிரீடம் கிடைக்கலைன்னு ஏதோ பெனாத்தறார் ராகுல் காந்தி.

இன்னொண்ணு. அழகிப் போட்டிக்குப் பொண்களை யார் ஆசைப்பட வைப்பா? அழகு சாதனங்கள் விக்கற நிறுவனங்கள் அவா வியாபாரத்துக்கு அதைச் செய்யும். ஒரு நாட்டுக்கு, அதுவும் வசதி குறைஞ்ச ஒரு நாட்டுக்கு, பிரதமரா வர ஆசைப்படற ஒரு அரசியல் தலைவர் அதைச் செய்யலாமா? ஒரு அச்சுப்பிச்சுக்கு இதுவும் புரியாது.

ராகுல் காந்தியைப் பத்தி பொதுவா ஒரு விஷயம் சொல்றேன். அவர் சாதாரண அச்சுப்பிச்சு இல்லை. அபாயகரமான அச்சுப்பிச்சு. அது தனி சமாச்சாரம்.

ராகுல் காந்தி திருந்தவே மாட்டார். ஆனா நம்ம சாதாரண ஜனங்கள், இந்த அளவு பைத்தியக்கார ஏமாத்துப் பேச்சுக்கு பலியாகாம உஷாரா இருப்பான்னு நினைக்கறேன். நீங்களும் அப்படித்தான நினைப்பேள்?

                           Author:
                R Veera Raghavan,     
                Advocate, Chennai


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *