ஹிந்துக்கள் மீதான தாக்குதல் 1,000 மடங்கு அதிகரிப்பு!

ஹிந்துக்கள் மீதான தாக்குதல் 1,000 மடங்கு அதிகரிப்பு!

Share it if you like it

உலகம் முழுதும் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புத் தாக்குதல் 1,000 மடங்கு அதிகரித்திருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சித் தகவலை தெரிவித்திருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்காவில் 4 ஹிந்து பெண்களிடம் மெக்ஸிகனைச் சேர்ந்த பெண், வாக்குவாதம் செய்து தாக்குதல் நடத்தினார். அதேபோல, போலந்து நாட்டில் ஹிந்து ஒருவர், இழிவாக நடத்தப்பட்டார். மேலும், அமெரிக்காவில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போது, லண்டனில் ஹிந்துக்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வடக்கு அமெரிக்க ஹிந்துக்கள் கூட்டமைப்பு சார்பில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் வாஷிங்டனில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய, ‘நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி ஜோயல் பின்கெல்ஸ்டீன், “உலகம் முழுதும் மத மோதல்கள் உள்ளிட்டவை தொடர்பாக எங்களுடைய அமைப்பு ஆய்வு செய்தது. இதில், ‘ஹிந்துபோபியா’ எனப்படும் ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலை தற்போது உலகெங்கும் பரவியுள்ளது தெரியவந்திருக்கிறது.

சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. இது, சமூக வலைத்தளங்களிலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. ஹிந்துக்கள் மீதான இத்தாக்குதல் கடந்த சில மாதங்களில் மட்டும் 1,000 மடங்கு அதிகரித்திருக்கிறது. எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க உளவு அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்காவில் மட்டும் 2020-ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் 500 மடங்கு அதிகரித்திருக்கிறது” என்றார். உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஹிந்து சனாதன தர்மத்தின் மகிமையை உணர்ந்து ஹிந்து மதத்தை தழுவி வரும் நிலையில், இப்படியொரு தாக்குதல் நடந்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it