உலகின் வல்லரசாக இந்தியா மாறும்: வெள்ளை மாளிகை அதிகாரி உறுதி!

உலகின் வல்லரசாக இந்தியா மாறும்: வெள்ளை மாளிகை அதிகாரி உறுதி!

Share it if you like it

உலகின் வல்லரசு நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி உறுதிபடத் தெரிவித்திருப்பது இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரத பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, உலக நாடுகள் பலவற்றுக்கும் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். வெளிநாடுகளுக்குச் சென்று வந்தாலும், ஓய்வின்றி நம் நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்கிறார். ஆனால், மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து தமிழ்நாட்டில் வசிக்கும் அந்நிய கைக்கூலிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். மோடி அதிகளவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதாகவும், இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்தான், இந்தியாவுக்கு அதிக முதலீடுகளை பெற்றுத் தருகிறது என்பது அந்த அறிவிலிகளுக்கு தெரிவதில்லை.

அதாவது, பிரதமர் மோடி ஒவ்வொரு நாட்டுக்குச் செல்லும்போதும், அந்நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி தொழிலதிபர்களையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். இதனால், இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்து வருகிறது. தவிர, உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து நல்லுறவை மேம்படுத்திக் கொள்வதால், இந்தியாவின் பாதுகாப்பும் அதிகரித்து வருகிறது. மேலும், இவ்வாறு உலக நாடுகள் பலவற்றுக்கு விஜயம் செய்து நல்லுறவை வளர்த்ததால்தான் மோடியும் சர்வதேச அளவில் மிகவும் வலிமையான தலைவராக உருவெடுத்து வருகிறார். இதன் காரணமாக இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளின் ஆதரவும் கிடைத்து வருகிறது.

இதன் மூலம் இந்தியா வல்லரசாகும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இந்த சூழலில்தான், எதிர்காலத்தில் இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழும் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்திருக்கிறார். உலகிலுள்ள நாடுகளின் தலைவர்கள் தொடர்பான தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை சவால்களை பற்றி விவாதிக்கும் ‘ஆஸ்பென்’ பாதுகாப்பு அமைப்பின் கூட்டம் வாஷிங்டனில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய வெள்ளை மாளிகையின் ஆசிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்பெல், “21-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிக முக்கியக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் நல்லுறவு போல வேறு எந்த இரு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு உறவும் இந்தளவுக்கு வேகமாகவும், ஆழமாகவும் வலுவாக்கப்படவில்லை.

ராஜ்ய ரீதியில் இந்தியா தனித்துவமான உத்திகளைக் கொண்டிருக்கிறது. ஆகவே, எதிர்காலத்தில் அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருக்காது. மாறாக, தனிப்பட்ட முறையில் அதிகாரமிக்க மற்றொரு வல்லரசு நாடாக இந்தியா இருக்கும். அதேசமயம், அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வலுப்பெறும். விண்வெளி, கல்வி, பருவநிலை, தொழில்நுட்பம் உட்பட அனைத்து துறைகளிலும் இந்தியாவுடனான இரு தரப்பு ஒத்துழைப்பு வளர்ச்சி அடைந்து வருகிறது. கொரோனா பரவலின்போது, தடுப்பூசிகளை விநியோகிப்பதில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்காவும் செயல்பட்டது. அதேபோல, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் இந்தியாவுடனான ஒத்துழைப்பு அதிகரித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it