தி.மு.க.வை காங்கிரஸில் இணைத்தால் ஸ்டாலின் தான் அடுத்த பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அமெரிக்கா நாராயணன் பிரபல இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். இதுதான், தற்பொழுது மக்களிடையே பேசுப்பொருளாகவும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து, இந்தியாவில் நடைபெற்ற பெரும்பாலான சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியுள்ளது. இதன்காரணமாக, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் மனசோர்வு அடைந்துள்ளனர். இதுதவிர, சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் (பஞ்சாப், மணிப்பூர், கோவா, உ.பி, உத்தரகாண்ட்) காங்கிரஸ் கட்சிக்கு மிக மோசமான தோல்வி ஏற்பட்டது.
பாரம்பரியமான காங்கிரஸ் கட்சி இன்று மெல்ல மெல்ல தனது செல்வாக்கையும், நற்பெயரையும் மக்களிடம் தொடர்ந்து இழந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியாக, தோல்விக்கு மேல் தோல்வியை காங்கிரஸ் சந்தித்து வருவதால், அக்கட்சியின் மூத்த தலைவர் பலர் மாற்று கட்சியில் அடைக்கலம் தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காந்தி குடும்பத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னோடிகள் பலர் போர்கொடி உயர்த்தியுள்ளனர். உட்கட்சி பூசலால் காங்கிரஸில் தற்பொழுது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ராகுல் காந்தி தலைமையில் ஓர் அணி பிரியங்கா காந்தி தலைமையில் மற்றொரு அணி என இரு அணிகளாக, அக்கட்சி பிரிய வாய்ப்பு உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருக்க விரும்பினால், கட்சிக்குள் தேர்தல் தேவையில்லை என்று முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அமெரிக்கை நாராயணன் பிரபல இணையதள ஊடகமான தினமலருக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்றால், தி.மு.க.வை காங்கிரஸில் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பிரதமர் கனவில் இருக்கும் ஸ்டாலினுக்கு இது ஒரு நல்ல ஆஃபர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க நாராயணம் பேசிய வீடியோ லிங்க் இதோ.
/https://www.facebook.com/watch/?extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&v=983386482374512