குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பான அமெரிக்காவின் கருத்துகள் தவறு !

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பான அமெரிக்காவின் கருத்துகள் தவறு !

Share it if you like it

மத்திய அரசு சமீபத்தில், குடியேற்ற திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், ‛‛ சிஏஏ சட்டம் இந்தியாவில் மத சுதந்திரத்தை பாதிக்கும் . இது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்தச் சட்டத்தையும், அது எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்”. எனக்கூறினார்.

இது தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவது. யாரின் குடியுரிமையையும் எடுப்பது இல்லை. இச்சட்டம் நாடற்றவர்களின் பிரச்னைகளை தீர்க்கிறது. கண்ணியத்தை வழங்குகிறது. மனித உரிமையை ஆதரிக்கிறது.

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பான அமெரிக்காவின் கருத்துகள், தவறானது. தவறான தகவல்களை கொண்டுள்ளது. தேவையற்றது என நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் பன்முகத்துவ மரபுகள் மற்றும் இந்தியாவின் பிரிவினைக்கு பிறகான வரலாறு பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள், பாடம் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்தியாவின் கூட்டாளிகள் மற்றும் நலன் விரும்பிகள் இச்சட்டத்தை வரவேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *