கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் அமீர் கான் சியட் டயர் கம்பெனி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அதில் பொதுமக்கள் தெருவில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று சொல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. பட்டாசு வெடிப்பு சம்பந்தமாக அவர் பேசிய வசனம் சமூக வலைத்தளங்களில் ஹிந்துக்களின் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பிரபல டயர் நிறுவனத்திற்கும் எதிர்ப்பு வலுக்கிறது.
இது சம்பந்தமாக கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி., ஆனந்தகுமார் ஹெக்டே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆனந்த் வர்தன் கோயங்காவிற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அமீர் கான் பொது இடத்தில் புகை பிடிப்பது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மேலும் ஓரிரு மாதத்தில் ஆங்கில புத்தாண்டு வரவிருப்பதால் அந்த சமயத்திலும் பட்டாசு வெடிப்பது சம்பந்தமாக இதேபோல் பேசுவாரா? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்து கொண்டிருக்கிறது.

