இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் அமித்ஷா !

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் அமித்ஷா !

Share it if you like it

புதுதில்லியில் நேஷனல் கோஆபரேடிவ் ஆர்கானிக்ஸ் லிமிடெட் ஏற்பாடு செய்த கூட்டுறவுகள் மூலம் கரிமப் பொருட்களை ஊக்குவிப்பது குறித்த தேசிய கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL), அதன் லோகோ, இணையதளம் மற்றும் சிற்றேடு ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் இலக்கை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி பல இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும், அதில் ஒன்று இயற்கை விவசாயம் என்று கூறினார்.

நாட்டில் 50 சதவீத இயற்கை விவசாயம் என்ற இலக்கை அடைவதில் பல பரிமாண அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் அவர் எடுத்துரைத்தார். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அதே நேரத்தில் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்தார்


Share it if you like it