சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேற்று டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தங்களுக்கு நேர்ந்த துயரங்களைப் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பகிர்ந்துகொண்டு நீதி மற்றும் மறுவாழ்வு கோரினர்.
இவர்களில் பலர் நக்சலைட்டுகளின் பிடியில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர், சிலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர், சிலர் முற்றிலும் ஊனமுற்றுள்ளனர். நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அமித்ஷாவை சந்தித்து, நக்சல் வன்முறையால் எங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களையும் இழந்து வாடுகின்றோம் என்று, கூறி நக்சலிசத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், எங்கள் பகுதியில் நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுக்கவும் அவர்கள் முறையிட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “இந்த நாட்டிலிருந்து நக்சலிசத்தையும் நக்சலிச எண்ணத்தையும் வேரோடு அகற்றி அமைதியை நிலைநாட்டுவோம். பஸ்தரின் 4 மாவட்டங்களைத் தவிர நாடு முழுவதும் நக்சலிசத்தை ஒழிப்பதில் நரேந்திர மோடி அரசு வெற்றி பெற்றுள்ளது. 31.03.2026 அன்று இந்த நாட்டிலிருந்து நக்சலிசத்திற்கு இறுதி விடைகொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, அதற்கு முன் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.