எதிர்வரும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித்ஷா. இவர், எதிர்வரும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. நிர்வாகிகளை பெங்களூரில் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது ;
எதிர்வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில், மதசார்பற்ற ஜனதாளத்துடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க போவதாக அக்கட்சியை சேரந்தவர்கள் வதந்தியை பரப்பி வருகின்றனர். பா.ஜ.க. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க போவதில்லை. தனித்தே நாங்கள் களம் காண்போம். இதில், 3 -ல் 2 – பங்கு தொகுதிகளை வென்று தனித்து ஆட்சி அமைப்போம் என கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 7 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 5 இடங்களில் வெற்றி பெற்றது. அதேவேளையில், 6 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.