மேற்கு வங்க தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சாணக்கியர் என புகழப்படும் அமித்ஷா கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியிடம் சினிமா பாணியில் நடத்திய பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை கிளப்பி உள்ளது.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கோல்கட்டா விமான நிலையத்தில், வரவேற்பறையில் விமானத்திற்காக காத்திருந்தார். அப்போது திடீரென உள்துறை அமைச்சர் அமித் ஷா, யெச்சூரி அமர்ந்திருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் யெச்சூரி வெளியேற முயற்சித்தார். அதற்குள் அமித் ஷா, தன் பாதுகாவலர்களை வெளியே அனுப்பிவிட்டு, ‘உட்காருங்கள்’ என, யெச்சூரியிடம் அன்பாக சொன்னாராம். வேறு வழியில்லாமல் யெச்சூரி அமர, அமித் ஷா அறைக் கதவை சாத்திவிட்டாராம் .அரை மணி நேரம், அந்த அறைக் கதவு திறக்கப்படவே இல்லை. அவ்வளவு நேரம் அமித் ஷாவும், யெச்சூரியும் என்ன பேசினர் என்பது ரகசியமாகவே உள்ளது.