அம்மா உணவகத்தால் பயனில்லை என்று சென்னை மேயர் கூறியிருக்கும் காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது. இதுதவிர, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களிலும் ’ஸ்டிக்கர் ஒட்டும்’ பணியையும் மிக சிறப்பாக செய்து வருகின்றன. இப்படிபட்ட, ஆட்சியே கடந்த ஒருவருடமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013 மார்ச் 19-ம் தேதி மலிவு விலை உணவகம் என்ற பெயரில் சென்னை சாந்தோம் பகுதியில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர், 15 இடங்களில் இந்த உணவகம் திறக்கப்பட்டது. இதையடுத்து, 4 நாட்களில் அந்த உணவகங்கள் அனைத்தும் அம்மா உணவகம் என பெயர் சூட்டப்பட்டது. இந்த உணவகம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. குறிப்பாக, ஏழை எளியவர்கள், கூலி தொழிலாளிகள் மற்றும் வீதியோரம் வசிக்கும் மக்களுக்கு இந்த உணவகம் அட்சய பாத்திரம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதுதவிர, பள்ளிச் செல்லும் குழந்தைகள், பெண்கள், வருமானம் குறைந்தவர்கள் இடையே இது பெரும் வரவேற்பை பெற்ற இருந்தது.
ஆதரவற்ற, வறுமையில் வாடும் எத்தனையோ லட்சம் பேரின் பசியை போக்கியது அம்மா உணவகம். இத்திட்டம், இதுகுறித்து முழு ஆய்வு செய்து மற்ற மாநிலங்கள் வெவ்வேறு பெயர்களில் சிறப்பாக நடத்து வருகின்றன. அத்தகைய, பயனுள்ள திட்டத்தை சென்னை மேயர் பிரியா பயனில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் லிங்க் இதோ.