சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த எண்ணூர் கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர்.
அருகே இருந்த குடியிருப்புகளுக்குள் இந்த அம்மோனியம் வாயு பரவியது. கடலில் 2 கிமீ தூரத்தில் இருந்து கசிந்து வெளியேறிய வாயு.. ஊருக்குள் வந்தது. இதனால் ஊருக்குள் இருந்த மக்கள் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள மக்கள் பலரும் இதனால் வேறு வழி இன்றி வீட்டை விட்டு ஓடினார்கள். பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
அதிர்ச்சி ரிசல்ட்: எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளன. எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் மற்றும் கடல் நீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.