நல்லவர்கள் போன்ற அடையாளத்தோடும் சாந்தமான முகத்திரையோடும் பல இஸ்லாமிய அமைப்புகள் கல்வி பயிற்சி நிலையங்கள் என்ற பெயரில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைக்கவும் பல அப்பாவி இளைஞர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து வருவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
ஹிஸிப் உத் தஹிரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பாக சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹமிது உசேன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை அகமது மன்சூர் சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரான ஹமீது உசேன் அவரது தந்தை சகோதரர் ஆகியோர் மாடர்ன் எஸன்சியல் எஜூகேஷனல் டிரஸ்ட் என்ற அமைப்பை துவக்கி பயங்கரவாத செயலுக்குப் பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளனர். இது தொடர்பாக என் ஐ ஏ புலனாய்வு அமைப்பு கைது செய்து விசாரித்து வருகிறது
கைதானவர்களின் வங்கிக் கணக்கு சொத்து விவரங்கள் தொடர்பில் உள்ள இளைஞர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் என் ஐ ஏ புலனாய்வு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
ஹமீது உசேன் அவரது தந்தை சகோதரர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட மாணவர்கள் ஆகியோரை மத்திய புலனாய்வுத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.
நல்லவர்கள் போன்ற அடையாளத்தோடும் சாந்தமான முகத்திரையோடும் பல இஸ்லாமிய அமைப்புகள் கல்வி பயிற்சி நிலையங்கள் என்ற பெயரில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைக்கவும் பல அப்பாவி இளைஞர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து வருவதை இந்து முன்னணி பல்வேறு காலகட்டங்களில் சுட்டிக்காட்டி உள்ளது . மேலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை புலனாய்வுத்துறை செவிகளுக்கு எண்ணியதை தொடர்ந்து என் ஐ ஏ வின் தீவிர கண்காணிப்பு காரணமாக தற்பொழுது பயங்கரவாத பயிற்சி வகுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை இந்து முன்னணி வரவேற்கிறது
பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை பயிற்சி வகுப்பில் சேர்த்து மூளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைக்கும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள இந்து பெற்றோர்கள் தமது குடும்பத்தில் உள்ள இளைஞர்களை பயிற்சி வகுப்புகளில் சேர்க்கும் முன் நன்கு விசாரித்து தமது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.