ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இதில் முக்கியமானது ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க’ விருது. இந்த ஆண்டு இந்த விருது AltNews-ன் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாபெரும் புரட்சி செய்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி தூக்குமேடை ஏறியவர்கள் தான் மருது சகோதரர்கள். இத்தனை பெருமை வாய்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த மருது சகோதரர்களை, தற்போது விருது வாங்கிய முகமது ஜுபைர் சமூக வலைத்தளத்தில் மருது சகோதரர்களை பற்றி விமர்சனம் செய்து தரக்குறைவாக பதிவிட்டார். அது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் சுதந்திரத்திற்காக போராடி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீரமரணமடைந்த மருது சகோதரர்களை கேலி செய்தவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்திருப்பது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையாகவே தேசப்பற்று இருந்தால் முகமது ஜுபைருக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பி பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஓட்டுக்காக திமுக அரசு எதுவானாலும் செய்யும் நாட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் எல்லோரும் வெளிநாடு சென்று விடுவார்கள் மக்கள்தான் திருந்த வேண்டும்