மோடியை பார்க்க கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் பயணம் செய்யும் முதியவர் !

மோடியை பார்க்க கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் பயணம் செய்யும் முதியவர் !

Share it if you like it

லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாஜக கூட்டணியை இறுதி செய்ய பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவை வளர்க்க”என் மண் என் மக்கள்” என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். இதைக் கடந்தாண்டு ஜூலை மாதம் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்த பாத யாத்திரையை நடத்தி முடித்துள்ளார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையில் பல்வேறு பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த பாத யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடக்கிறது. ஏற்கனவே திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதிகளில் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை இன்று காலை அந்த இரு தொகுதிகளிலும் பாத யாத்திரை செல்கிறார். அதைத் தொடர்ந்து பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இந்த நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் முதியவர் ஒருவர் பல்லடத்தில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தை காண காஞ்சிபுரத்திலிருந்து சைக்கிளில் செல்லும் காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சைக்கிளின் பின்புறம் பாஜக கொடியை கட்டிக்கொண்டு கொளுத்தும் வெய்யிலில் சைக்கிளை மிதித்து செல்வதை பார்க்கும்போது மோடியின் மேல் அவருக்கு இருக்கும் மதிப்பை வார்த்தைகளால் அளவிட முடியவில்லை. காஞ்சிபுரத்திலிருந்து பல்லடத்திற்கு பேருந்தில் சென்றாலே 8 மணி நேரம் மேல் ஆகும்.ஆனால் இந்த முதியவர் சைக்கிளில் செல்வது அனைவரையும் வியக்க வைக்கிறது.

https://x.com/Pulsar220_/status/1762313487710404846?s=20


Share it if you like it