தூத்துக்குடி C.S.I திருச்சபையின் தலைமை தேர்தலில் நடக்கும் அராஜகம்

தூத்துக்குடி C.S.I திருச்சபையின் தலைமை தேர்தலில் நடக்கும் அராஜகம்

Share it if you like it

தூத்துக்குடி: C.S.I  திருச்சபையில் நசரேத் மண்டல செயலாளர் பொறுப்பில் தற்போது இருக்கும் தொழிலதிபர் எஸ்.டி.கே .ராஜன். தேவாலயங்களுடைய பலகோடி சொத்துக்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளை நிர்வகிக்கும் பலம்வாய்ந்த பொறுப்பு என்பதற்காக இந்த பொறுப்புக்குந்தான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதற்காக முன் ஏற்பாடுகள் திருச்சபை குழு தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் ஊருக்குள் இருக்கும் பல மக்கள் பெயர்களை வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பொது மக்கள் போலிசாரிடம் புகார் அளித்தனர்.

பொது மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.டி.கே.ராஜன் அவர்களை போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் கூறியதாவது ரோமன் கத்தோலிக்கை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் ஓட்டு போடக்கூடாது மற்றும் வேற்று மதத்தினரை திருமணம் செய்தால் பெண் மதம் மாறினால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் மேலும் சென்னையில் வேலைசெய்து வரும் மக்கள் ஊருக்குள் குறைந்தபட்ஷம் 120 நாட்கள் இருந்தால் மட்டும் வாக்காளர் உரிமை வழங்கப்படும். இது தான் எங்கள் திருச்சபையின் விதிமுறைகள் என்று அவர் கூறியுள்ளார்


Share it if you like it