தமிழக பாஜக தலைவரை எதிர்க்கிறேன் என்ற பெயரில் இந்து விரோதம் பேசும் அன்புமணி – சரிவை நோக்கி பாமக ?

தமிழக பாஜக தலைவரை எதிர்க்கிறேன் என்ற பெயரில் இந்து விரோதம் பேசும் அன்புமணி – சரிவை நோக்கி பாமக ?

Share it if you like it

தமிழக பாஜகவையும் அதன் தலைவரையும் எதிர்க்க வேண்டும் எதிர்க்கட்சி அரசியல் செய்ய வேண்டும் எனில் பாமகவிற்கு ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் அதை எல்லாம் விடுத்து பெரியாரைப் பற்றி பேசினால் அதைப் பார்த்துக் கொண்டு பாமக சும்மா இருக்காது என்று அவர் கேட்க போக இன்று அவர்களின் உண்மை முகம் வெளிவந்து பாமக சரிவை எதிர் நோக்குகிறது. தமிழக பாஜக தலைவர் தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். பொதுவெளியில் தலைவர்களின் சிலைகளை வைப்பதற்கு என்று சட்டப்படி வரைமுறை இருக்கிறது. அதன் அடிப்படையில் அந்த சிலைகள் வேறு ஒரு பொது இடத்தில் தாராளமாக நிறுவப்படும். அதில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்து ஆன்மீக வழிபாட்டு தலங்களின் எதிரே இந்து மத துவேஷம் கொண்ட வாசகங்களை பதிப்பதை பாஜக அனுமதிக்காது . அதை ஒரு கட்சி எதிர்க்கும் எனில் அந்த கட்சியும் அதன் தலைமையும் அப்பட்டமான இந்து இந்திய விரோதம் செய்யும் கட்சி என்பது நிரூபணம் ஆகிவிடும். அதனால் தான் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறது. வெளிப்படையாக கேள்வி கேட்டதன் மூலம் பாமக தனது இந்திய விரோதத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரத்தில் அவ்வளவு அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது கூட அமைதியாக மௌனம் காத்தது பாமகவும் அதன் தலைமையும். தமிழக பாஜக தலைவரின் ராமசாமி பற்றிய பேச்சுக்கு பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று பேசுவது அண்ணாமலை எதிர்ப்பு என்ற பெயரில் பாமக இந்து விரோதம் பேச தயாராகிவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. அப்படியானால் இந்துமத ஆலயங்கள் வழிபாட்டுத்தலங்களின் முன்பு இந்து மதத்தை துவேஷிக்கும் வகையிலான கல்வெட்டுகள் வைப்பதையும் அதை திமுக நிறுவியதையும் பாமக ஆதரிக்கிறது. ஆதரித்து வருகிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் பாமகவும் திராவிடத்தின் வழியில் வந்த ஒரு இந்து இந்திய விரோதம் பேசும் கட்சிதான் என்பதை இன்று நிரூபித்திருக்கிறது.

பாமக இளைஞர்களை வன்னிய இளைஞர்களை திமுக அதிமுகவிற்கு கூட போகட்டும் பரவாயில்லை. போனால் கொஞ்ச நாளில் திரும்பி வந்துவிடுவார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு போனால் திரும்ப எக்காலமும் நம் கட்சிக்கு வர மாட்டார்கள். அதனால் ஆர்எஸ்எஸ் பாஜக பக்கம் நம் இளைஞர்களை போகவிடாமல் தடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக மேடையில் பேசும்போதே பாமக தலைமைக்கு தெரிந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அமைப்புகள் தான் இங்கு உண்மையான தேசியத்தை தெய்வீகத்தை ஆன்மீக குடையின் கீழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறது என்ற உண்மை. அதனால் தான் அது போன்ற ஒரு தேசிய ஒருங்கிணைப்பில் வன்னிய மக்கள் ஒன்றிணைந்து விட்டால் தங்களின் வாக்கு வங்கி அரசியல் பாதிக்கப்பட்டுவிடும். தங்களின் ஆட்சி அதிகாரம் தேர்தல் பேரம் கூட்டணி பலம் எல்லாம் சரிந்து விடும் என்ற அச்சத்தில் தான் பாமக தொடர்ச்சியாக பாஜகவையும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட தேசிய அமைப்பு இந்து முண்ணணி உள்ளிட்ட அமைப்புகளையும் தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது.

கருப்பர் கூட்டம் விவகாரம் தொடங்கி சமீபத்திய சென்னிமலை முருகன் கோவில் அபகரிப்பு முயற்சி திருநீர்மலை நீர் வண்ணப் பெருமாள் திவ்ய தேச திருத்தல் அபகரிப்பும் முயற்சி என்று தொடர்ச்சியாக இந்து மத வழிபாட்டு தலங்களை கைப்பற்ற முயற்சியில் மாற்றுமத அமைப்புகள் ஈடுபட்ட போது இதே பாமக கனத்த மவுனம் காத்தது. இத்தனைக்கும் கொங்கு மண்டலத்தில் இருக்கும் வன்னிய சமூக மக்கள் பாமகவின் சொந்த சமூக மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வட மாவட்டங்களில் முருக பக்திக்கும் அறுபடை வீடுகளுக்கும் யாத்திரை போபவர்களில் கணிசமான மக்கள் வன்னிய குலத்தில் உண்டு என்பது பாமக அறியாததல்ல. ஆனால் அவர்களுக்கு தங்கள் கட்சியின் வாக்கு வங்கி அரசியல் ஆதாயம் மட்டுமே முக்கியம். மற்றபடி இந்து மதத்தின் வழிபாட்டு தலங்களை பற்றியோ வண்ணிய மக்களின் பக்தி ஆன்மிகம் அவர்களின் பண்பாடு கலாச்சாரம் பாதுகாப்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விட்டது . அதன் காரணமாகத்தான் தொடர்ச்சியாக இந்து மத ஆலயங்கள் அபகரிக்கப்படும் முயற்சிகள் நடந்த போதும் இந்து அறநிலையத்துறையால் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்ட போதும் பாமக அமைதியாக ஒதுங்கிப் போனது .

மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலய விவகாரம் தொடங்கி தமிழகம் முழுவதிலும் இருக்கும் வன்னியர்களின் குலதெய்வம் வழிபாட்டு கோவிலான திரௌபதி அம்மன் ஆலயங்கள் சந்திக்கும் இடர்பாடுகள் ஏராளம் அதன் பின்னணியில் இருப்பவர்கள் எல்லாம் திமுக அதிமுக தரப்பினர் என்றாலும் அவர்கள் முழுமையாக திக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். இந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளையும் அதன் பாரம்பரியங்களையும் முற்றாக சிதைக்க வேண்டும். வன்னிய மக்களை சாதி மதமாற்ற விவகாரங்களுக்கும் உட்படுத்த வேண்டும். அவர்களின் கட்டுக்கோப்பான வாழ்வியலை சிதைக்க வேண்டும் என்ற திட்டமிட்டு செய்யும் அரசியல் சதிகள் ஏராளம். அதையெல்லாம் எதிர்த்து பிறந்து அதன் ஆதரவில் வளர்ந்ததுதான் பாமக கட்சி. ஆனால் எந்த சித்தாந்தத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சி பிறந்ததோ ? எந்த சித்தாந்தத்தை முன்வைத்து வன்னிய மக்களின் வளர்ந்ததோ இன்று அதே சித்தாந்தத்திற்கு எதிர் திசையில் பாமக பயணிக்க தொடங்கி இருக்கிறது. இனி எந்த காலத்திலும் பாமகவிற்கு ஏறுமுகம் வளர்ச்சி என்பது இருக்காது.


Share it if you like it