வெடிக்க 2மணி நேரம்… குடிக்க 24 மணி நேரமா? தி.மு.க.வை சாறு பிழிந்த அன்புமணி!

வெடிக்க 2மணி நேரம்… குடிக்க 24 மணி நேரமா? தி.மு.க.வை சாறு பிழிந்த அன்புமணி!

Share it if you like it

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வெளுத்து வாங்கி இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவி இருந்த கால கட்டத்தில், வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதித்து இருந்தது விடியல் அரசு. கோவில்களுக்கு சென்றால் கொரோனா மக்களுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது என தி.மு.க. அரசு தெரிவித்து இருந்தது. அதேவேளையில், கொரோனா தொற்று பரவ துளியும் வாய்ப்பு இல்லாத மதுக்கடைகளை கட்டுப்பாட்டுடன் திறந்து இருக்க ஸ்டாலின் அரசு அனுமதி வழங்கி இருந்தது. இப்படியொரு, உத்தரவை ஸ்டாலினை தவிர வேறு யாராலும் அறிவிக்க முடியாது என பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை வாழ்த்தி இருந்தனர்.

மதுக்கடைகளை திறந்திருக்க அனுமதித்த அரசு, கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதித்து இருப்பது கடும் கண்டனத்திற்குறியது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில், ஒரு வாரத்திற்குள் மிகப்பெரிய போராட்டம் தனது தலைமையில் நடைபெறும் என்று அரசிற்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இதனிடையே, ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளி இன்னும் சில நாட்களில் வர இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை இந்த பண்டிகைகாக காத்து இருக்கின்றனர். இந்த நிலையில், காலையில் இரண்டு மணி நேரமும், மாலையில் இரண்டு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மீறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. அக்கூட்டத்தில், கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார் ; பட்டாசு வெடிக்க மட்டும் இரண்டு மணிநேரம். ஆனால், குடிக்க மட்டும் 24 மணி நேரமா? என மக்களின் உள்ள குமுறலை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் லிங்க் இதோ.


Share it if you like it