செம்மரக் கடத்தல் மன்னன் தி.மு.க. ‘புஷ்பா’ கைது!

செம்மரக் கடத்தல் மன்னன் தி.மு.க. ‘புஷ்பா’ கைது!

Share it if you like it

தமிழ்நாட்டைச் சேர்ந்த செம்மர கடத்தல் மன்னனான தி.மு.க. பிரமுகர் பெருமாளை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர் தி.மு.க. ஒன்றிய சேர்மனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் இருந்து செம்மரங்கள் கடத்தப்பட்டு, இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டு வருகிறது. கடந்த பல வருடங்களாகவே நடந்து வரும் இக்கடத்தலில் பெரும்பாலும் ஈடுபடுவது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். கடந்த 2015-ம் ஆண்டு சேஷாசல வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்காரர்கள் மீது அம்மாநில போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, ஆந்திர மாநில எல்லையில் இருக்கும் ஒ்ருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் செம்மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்களாக இருந்த வருகின்றனர். மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு சில காலம் செம்மரக் கடத்தல் இல்லாமல் இருந்தது. ஆனால், சில வருடங்களாக மீண்டும் செம்மரக் கடத்தல் தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில்தான், பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரங்கள் ஆந்திராவிலிருந்து கடத்தப்படுவதாக சித்தூர் மாவட்ட எஸ்.பி. நிஷாந்த்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சித்தூர் மாவட்ட போலீஸார் பல்வேறு இடங்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருப்பதி – வேலூர் நெடுஞ்சாலையில் செர்லோபள்ளி என்கிற இடத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மினி லாரியும், 3 கார்களும் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த ஆந்திர போலீஸார் மேற்படி வாகனங்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது, மேற்படி வாகனங்களில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. அதேசமயம், செம்மரம் கடத்தி வந்த 6 பேர் தப்பிச் சென்று விட்டனர். எனினும், போளூரைச் சேர்ந்த பெருமாள் மற்றும் ஆரணியைச் சேர்ந்த வேலு ஆகியோரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

மேற்படி பெருமாள்தான் தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி சாந்தி, போளூர் ஒன்றிய சேர்மனாக இருந்து வருகிறார். பெருமாள் மீது ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர், ‘புஷ்பா’ திரைப்பட பாணியில் பல நூதன வழிகளில் செம்மரங்களை கடத்திவரும் ‘கடத்தல் மன்னன்’ என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேலும், இவரது கையாட்களான தப்பிச் சென்ற வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சி, போளூரைச் சேர்ந்த பாலாஜி, வினோத், சரத், கல் குப்பத்தைச் சேர்ந்த அஜித், சென்னையை சேர்ந்த ரமேஷ், குமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்கள் கூட்டாக சேர்ந்து திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை கடத்தி, சென்னையை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு கைமாற்றி விடுவதும், அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.


Share it if you like it