50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 7 பேர் பலி!

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 7 பேர் பலி!

Share it if you like it

ஆந்திராவில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மணமகளுக்கும் இன்று காலை திருமண நிச்சயதார்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, தர்மாவரத்தைச் சேர்ந்த மணமகன் வீட்டார், ஒரு தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து நேற்று இரவு நகரிக்கு வந்திருக்கிறார்கள். இப்பேருந்தில் 52 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். பேருந்து இரவு 11.30 மணியளவில் பாக்கராப்பேட்டை மலைப்பாதை வழியாக திருப்பதி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்தில் வந்த அனைவரும் நன்றாக தூக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மலைப் பாதை வளைவு ஒன்றில் பேருந்து வேகமாகத் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சாலையோரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால், அதிர்ச்சியடைந்து விழித்த பயணிகள், பேருந்து கும்புற கவிழ்ந்து விழுவதைக் கண்டு கூட்டலிட்டனர். இதுகுறித்து, அவ்வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் டிரைவரின் அலட்சியத்தின் காரணமாகவே விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்திருக்கிறது.


Share it if you like it