மூன்று நாடுகள் இந்து தேசமாக மாறுவதற்கான கிரக அமைப்பு இருப்பதாக பிரபல ஜோதிடர் கணித்து இருப்பதை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.
பிரபல ஜோதிடராக இருப்பவர் அனிருத் குமார் மிஸ்ரா. இவர், கணித்து கூறும் பலன்களுக்கு 10-க்கு எட்டு சரியாக இருக்கும் என்பது பலரின் கருத்து. அந்தவகையில், ராம ஜென்ம பூமி வழக்கில் இறுதி தீர்ப்பின் படி அயோத்தியில் ராம பிரானுக்கு கோயில் கட்டப்படும் என்று 5 வருடங்களுக்கு முன்பே மிக துல்லியமாக கணித்தவர்.
அதேபோல, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான அரசு அபார வெற்றி பெறும் என்று உறுதியாக கூறியவர். இதையடுத்து, மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மம்தா பேனர்ஜி தோல்வியை தழுவுவார் என்று கணித்து இருந்தார். அதேபோல, பா.ஜ.க வேட்பாளர் சுவேந்த் அதிகாரியிடம் மண்ணை கவ்வினார் மம்தா பேனர்ஜி.

இதனிடையே, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா இழந்த கில்கிட், பல்டிஸ்தான், பகுதிகளை 2022-ம் ஆண்டு மீட்கும் முயற்சியில் மோடி தலைமையிலான அரசு தீவிரம் காட்டும் என கடந்த ஆண்டு கணித்து இருக்கிறார். அதேபோல, காங்கிரஸ் அரசு சீனாவிடம் இழந்த (அக்சாய் சின் 1962 இல் இழந்த பகுதி ) இந்திய பகுதிகளை 2032 -க்குள் கத்தியின்றி ரத்தமின்றி இந்தியா மீட்கும் என்று கணித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில் தான், அடுத்த 15 ஆண்டுகளில் மூன்று நாடுகள் இந்து நாடாக மாறும் என்பதை ஜூலை 4-ம் தேதியின் கிரக அமைப்பு காட்டுவதாக தெரிவித்து இருக்கிறார்.