தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இருந்த போது அம்மா உணவகம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி இட்லி ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்றும், மதிய உணவு 5 ரூபாய் என்ற வீதத்திலும் விற்கப்பட்டது. தினசரி கூலி வேலை செய்பவர்கள், குறைந்த சம்பளம் வாங்குவோர், பள்ளி மாணவர்கள் என பலருக்கும் உணவளிக்கும் இடமாக மாறியது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த திட்டத்தை பல மாநில அரசுகளும் வெவ்வேறு பெயர்களில் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஆந்திராவில் அண்ணா உணவகம் பெயரில் சந்திரபாபு நாயுடு உணவகத்தை திறந்து வைத்தார். இதில் மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட உள்ளது. மதிய உணவு 15 ரூபாய்க்கும் இரவு உணவு 5 ரூபாய்க்கும் கொடுக்கப்படுகிறது.
இடையில் ஆட்சி மாறியதால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்த படுவதாக கூறப்படுகிறது.